தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலகங்களையும் ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


மாவட்ட  முதன்மை கல்வி நிலையங்களை ஆய்வு செய்ய மொத்தம் 20 அதிகாரிகளை பள்ளிக் கல்வித்துறை நியமித்துள்ளது. இம்மாத (ஜூலை) இறுதிக்குள் ஆய்வு செய்து ஆய்வறிக்கையினை சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.