டெபிட் கார்டு இல்லாவிட்டாலும் ஏடிஎம்.,ல் பணம் எடுக்கும் வசதி பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


ஏடிஎம் வாசல் வரைக்கும் வந்தபின்னர் தான் நம்மில் பலருக்கும் ஏடிஎம் கார்டை மறந்துவிட்டது குறித்த நினைவே வரும். இதை நாம் ஒருமுறையேனும் செய்யாமல் இருந்திருக்க மாட்டோம். அப்படி நீங்கள் ஏடிஎம் டெபிட் கார்டை மறந்துவிட்டு ஏடிஎம் வந்து, ஒருவேளை நீங்கள் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வாடிக்கையாளராக இருந்தால் உங்களுக்கு ஒரு சலுகை இருக்கிறது. இந்த புதிய பேங்கிங் முறையை பாரத ஸ்டேட் வங்கி அண்மையில் தான் அறிவித்துள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் SBI YONO வசதியைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.


எந்த ஒரு எஸ்பிஐ ஏடிஎம்மிலும் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். இந்த செயலி பிஓஎஸ் டெர்மினலாகவும், சிஎஸ்பி (கஸ்டமர் செர்வீஸ் பாயின்ட்டாகவும் செயல்பட்டு, ஏடிஎம் கார்டை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தைத் தவிர்க்கிறது. SBI YONO முறையைப் பயன்படுத்தி, குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.10,000 வரை எடுத்துக் கொள்ளலாம்.


எப்படி பணம் எடுப்பது?


Step 1: உங்கள் ஃபோனில் யோனோ ஆப்பினுள் நுழையவும்
Step 2: ஹோம் பேஜில் யோனோ கேஷ் என்பதை கிளிக் செய்யவும் (YONO Cash)
Step 3: யோனே கேஷின் கீழ் ஏடிஎம் செக்‌ஷன் என்பதை கிளிக் செய்யவும்
Step 4: எவ்வளவு பணம் தேவை என்பதை டைப் செய்து என்டர் கொடுக்கவும்
Step 5: ஆறு இலக்கம் கொண்ட டிஜிட் பின் ஒன்றை உருவாக்கவும்
Step 6: நீங்கள் பின் நம்பரை உருவாக்கியவுடன், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு யோனோ கேஷ் பரிவர்த்தனை பிரத்யேக எண் வரும். அந்த எண்ணின் வேலிடிட்டி 6 மணி நேரத்துக்கு இருக்கும்.
Step 7: இப்போது ஈங்கள் ஏடிஎம்.,லி யோனா கேஷ் என்பதை கிளிக் செய்யவும்
Step 8: அதில் யோனே கேஷ் பரிவர்த்தனை நம்பரையும் கூடவே நீங்கள் உருவாக்கிய 6 இலக்க பிரத்யேக பின் நம்பரையும் டைப் செய்யவும்.
Step 9: இவற்றை செய்து முடித்தவுடன் நீங்கள் பணத்தைப் பெறலாம். 


அவ்வளவு தான் இனி ஏடிஎம் அட்டை இல்லாவிட்டாலும் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுப்பதும் சுலபமாகிவிட்டது.


ஆனால், இந்த வசதி இப்போதைக்கு எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அமலாகியுள்ளது. மற்ற வங்கிகளின் ஏடிஎம் அட்டை வைத்திருப்பவர்கள் இதனைப் பயன்படுத்த முடியாது. ஒருவேளை இந்த வங்கியின் சேவைக்குக் கிடைக்கும் பிரபல்யத்தைப் பார்த்து இனி மற்ற வங்கிகளும் ஏற்படுத்தலாம்.