தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது வழக்கின் சாட்சியாக காவல்நிலையத்தில் வேறொரு புகார் அளிக்க வந்த பேருந்து நடத்துனரான ஆரோக்கியசாமி என்பவர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். புகார் அளிப்பதற்காக காவல்நிலையத்தின் அருகே நின்றுகொண்டிருந்த போது காவல்நிலையத்தில் உள்ளே இருந்து கதறல் சத்தம் கேட்டதாகவும் சாட்சியம் அளித்தார். இதனையடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையானது 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு
இடமாறுதல் வழக்கு தொடர்பான மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்
நாகர்கோவிலைச் சேர்ந்த உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பெமிலா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், நாகர்கோவில் முட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, பரமக்குடி நயினார் கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இடமாறுதல் செய்ததை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பணியிடமாறுதல் என்பதை அரசு ஊழியர்கள் உரிமையாக கோர இயலாது. மனுதாரர் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனக் குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பெமிலா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.