புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்கவேண்டும் என அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார். புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது: மனித உயிர் சம்பந்தமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டியது அரசின் கடமையாகும். புதுச்சேரி நகர பகுதி முழுவதும் புற்றீசல் போன்று பல தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள், பரிசோதனை கூடங்கள் உருவாகி வருகின்றன.
Cuddalore: பாழடைந்த வீடு.. காதலன் கண் முன்னே கடலூரில் நடந்த கொடூரம்
இங்கு போதிய மருத்துவ வல்லுனர்கள் மற்றும் ஆய்வுக்கூட தொழில்நுட்ப ஊழியர்கள் உள்ளனரா என்பதை பற்றிய விவரங்களை சுகாதாரத் துறை ஆய்வு செய்வதில்லை. மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய் அறுவை சிகிச்சை செய்யும் சில தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஆபரேஷன் தியேட்டர்களில் போதிய நவீன கருவிகள் இல்லாமலேயே ஆபரேஷன் செய்யப்படுகிறது. பரிசோதனை கூடத்திற்கு அனுமதி பெற்றதை வைத்துக் கொண்டு அறுவை சிகிச்சை மற்றும் பிரசவம் பார்ப்பதும், பிரசவ நேரத்தில் ஏற்படும் ஆபத்தான சூழ்நிலையில் ஆபரேஷன் செய்ய நோயாளிகளை வேறு ஆஸ்பத்திரிக்கு அவசர அவசரமாக அனுப்புவதும், அதனால் பல நோயாளிகள் மரணமும் அடைகிறார்கள்.
சிமெண்ட் தெருவையே காணோம் சார்.. கோலியனூரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு..
இந்தியா சமத்துவ நாடாக மாற திராவிட மாடல் வழிகாட்டும் - சமத்துவபுரம் திறப்பு விழாவில் முதல்வர் பேச்சு
தனியார் மருத்துவமனை, பரிசோதனை கூடங்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சமீபத்தில் தனியார் மருத்துவமனையில் இளம்பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த பெண் திடீரென மரணமடைந்தார். அந்த மருத்துவமனையில் உள்ள ஆபரேஷன் தியேட்டரில் போதிய உள்கட்ட வசதி உள்ளதா? அதற்காக நவீன கருவிகள் உள்ளதா? ஆபரேஷன் செய்த மருத்துவர்கள் அதற்கேற்ப சிறப்பு மருத்துவர்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை புதுச்சேரி மாநில சுகாதாரத் துறை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். புதுவை மாநிலத்தில் தனியாரால் நடத்தப்படும் மருத்துவமனைகள் மருத்துவ சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய சிறப்பு வல்லுனர்கள் குழுவை அரசு அமைக்கவேண்டும் என அதிமுக செயலாளர் அன்பழகன் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்