கடந்த 26 ஆம் தேதி தஞ்சாவூர் வந்தவர் 27 ஆம் தேதி நடைபெற்ற

  தினகரன் மகள் வரவேற்பில் கலந்து  கொண்டார்.  பின்னர் 29 ஆம் தேதி கமுதி பசும்பொன் சென்று தேவர் சமாதியில் மரியாதை செலுத்திய பிறகு தஞ்சாவூர் வந்தார். இதையடுத்து நவம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில்  தஞ்சாவூரில் உள்ள இல்லத்தில்  இருந்தபடி ஆதரவாளர்களை சந்தித்தார்.


அதிமுக ப துச் செயலாளர் நான் தான். அத்துடன் விரைவில் தமிழகம் முழுவதும் கிராமம் கிராமாக சுற்றுப்பயணத்தை தொடர இருக்கிறேன். நீங்க நினைப்பது சீக்கிரமே நடக்கும் அதிமுக என் தலைமையின் கீழ் செயல்படும் அன்றைக்குத் தான் நமக்கெல்லாம், கடந்த சில வருடத்திற்கு பிறகு நிஜமான தீபாவளி என சசிகலா தெரிவித்ததையடுத்து ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அவரது ஆதரவாளர்கள், குழந்தைதளுடன் குடும்பத்துடன் சசிகலாவை சந்தித்து வருவதால், மேலும், சசிகலாவிற்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. முதலில் மூன்று நாள்கள் மட்டுமே ஆதரவாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆதரவாளர்களின் கூட்டத்தால், கூடுதலாக ஒரு நாள் 6 ஆம் தேதியும் சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




அதிமுகவினர் இடையே ஏற்பட்ட பரபரப்பான நிலையில், எந்தவிதமான டென்சனும் இல்லாமல், உற்சாகமாக, சசிகலா, தனது முக்கியமான உறவினர்களுடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். தனது கணவரான மறைந்த நடராஜன், தனது மனைவி சசிகலாவிற்காக, தஞ்சாவூரில் பிரமாண்டமான வகையில் பங்களாவை கட்டினார். ஆனால் சசிகலா, வீட்டிற்கு வரவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் போயஸ் தோட்டத்திலேயே இருந்து வந்தார். சுமார் 30 வருடங்களுக்கு பிறகு தீபாவளி நாளில் சசிகலா தஞ்சாவூரில் தீபாவளி பண்டிகை கொண்டாடியதால், உறவினர்கள், ஆதரவாளர்கள்  மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து சசிகலா உறவினர்கள் கூறுகையில், சசிகலா தற்போது தங்கியிருக்கும் பங்களா, அவரது கணவர் மறைந்த ம.நடராசன் சசிகலாவிற்காக ஆசை ஆசையாய்  கட்டினார். ஆனால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் போயஸ் கார்டனிலேயே இருந்ததார். மனைவிக்காக கட்டிய பங்காளாவில், மனைவி சசிகலா, ஒரு நாள் கூட தங்கவில்லை என்று வருத்ததுடன் இருந்துள்ளார். இதனை தனது உறவினர்களுடன் புலம்பி வந்துள்ளார்


இந்நிலையில் நடராசன் இறந்த போது 10 நாள்கள் தங்கினார். தற்போது அதிமுகவை கைப்பற்ற சசிகலா, அதற்கான முடிவுகளை எடுப்பதற்காக தங்கியுள்ளார். தனது அண்ணனும் டாக்டர் வெங்கடேஷின் அப்பாவுமான  சுந்தரவதனம் இறந்தையொட்டி மேல வஸ்தா சாவடியில் உள்ள வெங்கடேஷ் வீட்டில் நேற்று தீபாவளி படையல் போடப்பட்டது. அதில் கலந்து கொண்டவர் பின்னர் தனது அண்ணன் மகன் மறைந்த மகாதேவன் வீட்டிற்கு சென்றார். மகாதேவன் உயிரிழந்து நான்கு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் அவர் வீட்டுக்குள் சென்ற சசிகலா சில நிமிடங்கள் யாரிடமும் பேசாமல் , இறுக்கத்துடன் மெளனமாக இருந்துள்ளார்.


மகாதேவன் மேல் அதிக பாசம் வைத்திருந்தேன். ஆனால் மகாதேவன், இவ்வளவு சிக்கிரமே நம்மள விட்டுடு போய்டுவானு நான் நெனைக்கவே இல்லை. எனக்கு அவன் நினைப்பாக இருக்கின்றேன் என்று பேசியபோது,  மகாதேவன் மனைவி மற்றும் மகள்களிடம் கண்கள் கசிந்தன. இதனை பார்த்த மகாதேவனின் மூத்த மகள் டாக்டர் கீர்த்திகா சசிகலாவின் கண்களை துடைத்துள்ளார் அப்போது உனக்கு என்ன தேவைன்னாலும் எங்கிட்ட கேட்க வேண்டும். மகாதேவன் மனைவியிடம் கீர்த்திகாவிற்கு, மாப்பிள்ளை பாருங்க நல்ல இடமா அமைஞ்ச உடனே நானே முன்னின்று திருமணத்தை நடத்தி வைக்கிறேன். நாலு வருஷமா அப்பா இல்லாதால், தவித்த வந்த எங்களுக்கு, நீங்க வந்தது, அப்பா இல்லாத குறையை போக்கி விட்டீர்கள் என்று கூறி மகாதேவனின் மகள் கண்ணீர் விட்டு அழுதார்.




நடராசனின் தம்பி ராமச்சந்திரன் மகன் டாக்டர் ராஜுவின் குழந்தை மற்றும் நடராசன்  சகோதரர்களின் பங்காளி பேர குழந்தைகளுடன், தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது சசிகலா, உற்சாகமாக, குழந்தையோடு குழந்தையாகவே மாறிவிட்டார். இதனை நடராசன் இருந்த பார்த்திருந்தால், மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார். சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு, தஞ்சாவூரில், கணவர் நடராஜன் மனைவிக்காக கட்டிய பங்காளாவில், சசிகலா, தங்கி தீபாவளி பண்டிகையை கொண்டியிருப்பது உறவினர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், வரும் 7 ஆம் தேதி சென்னை புறப்படும் சசிகலா, தமிழகம் முழுவதும் கிராமம்  தோறும் சுற்றுப் பயணம் செல்ல இருக்கிறார் என கூறப்படுகிறது.