கொரோனாவின் இரண்டாம் அலை சற்று ஓய்ந்ததை அடுத்து மக்கள் மகிழ்ச்சியாய் இருக்கின்றனர். ஆனாலும், தினசரி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரம் மகிழ்ச்சிக்குள் அச்சம் கலக்கிறது. இன்று தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாடிவரும் சூழலில் இன்றைய கொரோனா விவரத்தை தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இன்று மேலும் 945 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.15 பேர் உயிரிழந்துள்ளனர். 1,047 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27, 06, 493ஆக அதிகரித்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,191ஆக உள்ளது.


 


குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 59 ஆயிரத்து 300ஆக உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் அந்த அறிக்கையில், “இன்று கொரோனா உறுதியானவர்களில் ஆண்கள் 566 பேரும், பெண்கள் 379 பேரும் ஆவர். இதுவரை மொத்தமாக 15,79,595 ஆண்களுக்கும், 11,26,860 பெண்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்தவர்களில் இன்று 1,047 பேரும் இதுவரை 26,59,407 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள்.


இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15 அதில் தனியார் மருத்துவமனையில் இறந்தவர்கள் 5, அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் 10. மாவட்டவாரியாக சென்னையில் இன்று மட்டும் 112 பேருக்கும், கோயம்புத்தூரில் 107 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக கோயம்புத்தூரிலும், கடலூரிலும் இன்று மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் அதிகபட்சமாக  சென்னையில் 1304 பேரும், அதற்கு அடுத்ததாக கோயம்புத்தூரில் 1232 பேரும் சிகிச்சையில் இருக்கிறார்கள்”  என குறிப்பிடப்பட்டுள்ளது.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: பட்டா அல்ல நம்பிக்கை.. முதல்வர் ஸ்டாலினுக்கு நெகிழ்ச்சியாய் நன்றி சொன்ன சூர்யா - ஜோதிகா!