ஒரு மாதத்திற்கு மேலாக, 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் நடத்திய போராட்டமானது வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. 


பேச்சுவார்த்தையில் உடன்பாடு:



சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று சாம்சங் ஊழியர்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது . மதியம் 3 மணியிலிருந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் தீர்வு எட்டப்பட்டிருக்கிறது.  சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர்  எ.வ. வேலு தெரிவித்தார்.



இதுகுறித்து  சிஐடியு சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது “ எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறிய நிர்வாகம் அரசின் அழுத்தத்தின் அடிப்படையில் , தற்போது முன்னேற்றம் கிடைத்துள்ளது. 
தொழிலாளர்கள் தான் சங்கத்திற்கு அனுமதி தர வேண்டும். நிர்வாகம் அனுமதி தர வேண்டும் என்பது இல்லை, இன்று பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது நல்லபடியாக நடைபெற்றது.


அரசு நல்ல முயற்சிகளை எடுத்திருக்கிறார்கள் . சங்கம் அங்கீகாரம் எங்களுடைய கோரிக்கை அல்ல. 85 சதவீத தொழிலாளர்கள் இந்த சங்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் அந்த அங்கீகாரம் தான்  அடிப்படை  . 


மேலும், நாளை நடைபெறும் சிஐடியூ பேரவை கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் சி.ஐ.டி.யு மாநில தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்தார்.