தமிழ்நாட்டில் 50 மாவட்டங்களில் ஆர். எஸ். எஸ் அமைப்பு பேரணி நடத்த அனுமதி தரவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வாதிட்டதையடுத்து தமிழ்நாட்டில் 50 மாவட்டங்கள் உள்ளதா என அரசு தரப்பு வழக்கறிஞர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். 


ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தமிழ்நாட்டில் பேரணி நடத்த அனுமதிக்க வேண்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விவாதத்தின்போது, ஆர்.எஸ். எஸ் தரப்பு வழக்கறிஞர் ,"50 மாவட்டங்களில் பேரணி தடுத்து நிறுத்தம் என கூற, உடனே அரசு தரப்பு வழக்கறிஞர் தமிழ்நாட்டில் ஏது 50 மாவட்டங்கள் என அதிர்ச்சியில் பதில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,  வழக்கு மார்ச் மாதம் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


மேலும் அரசு தரப்பில், கோவை வெடிகுண்டு சம்பவம் உள்ளிட்டவற்றை எடுத்துக்காட்டி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம் மேற்கொண்டது. அதேபோல்,  உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்தபோதும் அதை கருத்தில் கொள்ளாமல் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், எங்கெல்லாம் பேரணி நடத்த அனுமதி, என்னென்ன விதிமுறைகள் என்பதை தெரிவிக்க கால அவகாசம் தேவை என தமிழ்நாடு அரசின் வாதமும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 


அதேபோல், ஆர். எஸ். எஸ் தரப்பில், “பேரணி நடைபெற்றால் சட்டம் -  ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற தமிழ்நாடு அரசின் வாதத்தில் உண்மையில்லை. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது” என வாதத்தின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கு முன்னர், தமிழ்நாட்டில் உள்ள 50 இடங்களில் கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. 


தமிழ்நாட்டில் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்களில் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும்,  44 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்தி கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 


சட்டம் ஒழுங்கு பிரச்னையை சுட்டிக்காட்டி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு, அக்டோபர் 2ஆம் தேதி தமிழ்நாடுஅரசு அனுமதி வழங்கவில்லை. இதனை அடுத்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காததை எதிர்த்து உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆர். எஸ். எஸ் தரப்பில் தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 2 ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 6-ஆம் தேதி நிபந்தனையுடன் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்திகொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.


நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தால், காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்து இருந்தது. மேலும், தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு, நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதர 6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தது. இந்த 6 இடங்களில் பேரணி நடத்த  2 மாதங்களுக்கு பிறகு புதிய மனு கொடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


இந்நிலையில், நிபந்தனையுடன் கூடிய அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தகது.