கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தேசிய அளவிலான ஊராட்சி விருதுக்கான தகுதியான ஊராட்சிகளை தேர்வு செய்து வட்டார அளவிலான குழு ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ம.வாணி ஈஸ்வரி தலைமையில் நடைபெற்றது.


 



 


இக்கூட்டத்தில் கரூர் மாவட்டம், கிராம ஊராட்சிகள் அளவில் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் முறையான திட்டமிடல், செயல்படுத்துதல், கண்காணிப்பு மற்றும் சிறந்த நிர்வாகத்திறனுடைய ஊராட்சிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, வறுமையில்லாத மற்றும் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்ட ஊராட்சி, ஆரோக்கியமான கிராம ஊராட்சிகுழந்தைகளிடம் நட்பு பாராட்டும் ஊராட்சி, தண்ணீரில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி, தூய்மையான மற்றும் பசுமையான ஊராட்சி, உட்கட்டமைப்புகளால் தன்னிறைவு பெற்ற ஊராட்சி, சமூக பாதுகாப்புடைய ஊராட்சிசிறந்த நிர்வாகத்திறன் கொண்ட ஊராட்சி, மகளிருடன் நல்லிணக்கம் கொண்ட ஊராட்சி ஆகிய ஒன்பது  கருப்பொருள்களில் தேசிய அளவிலான ஊராட்சி விருதுக்கான தகுதியான ஊராட்சிகளை தேர்வு செய்து வட்டார அளவிலான குழு இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான மாவட்ட குழு,


 


 




 


ஊராட்சி தலைவர்களால் வழங்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து தகுதியான ஊராட்சிகளை அதற்கான ஆவணங்களின் அடிப்படையில் மதிப்பெண்களை கூர்ந்தாய்வு செய்துமுன் மொழிவுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் பரிந்துரையுடன் மாநில பரிந்துரைக்கு அனுப்பி வைத்திட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  


 


 




 


இக்கூட்டத்தில் கரூர் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.அன்புமணி, மாவட்ட குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அம்மாபட்டி, ஆலமரத்துப்பட்டி, எருமார்பட்டி, நல்லூர், இனுங்கூர், கே.பேட்டை, சத்தியமங்கலம், போத்துராவுத்தன்பட்டி, நெய்தலூர் ஆகிய கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.