ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம், அக்டோபர் 2ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6ம் தேதிக்கு அனுமதி அளித்துள்ளது.
சட்ட ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடத்த அக்டோபர் 2ம் தேதி தமிழ்நாடு காவல்துறை தடை விதித்திருந்தது.
இந்நிலையில் நவம்பர் 6ம் தேதி, ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுப்பு:
தமிழ்நாட்டில் அக்டோபர் 2-ம் தேதி நடைபெறவிருந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு, 50 இடங்களில் காவல்துறை அனுமதி மறுத்தது. சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என, ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளிடம் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கவேண்டுமென ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், இன்று விசாரணைக்கு வந்தது.
தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து கடந்த 22ஆம் தேதி சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பேரணிக்கு அனுமதி:
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில், ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம், அக்டோபர் 2ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6ம் தேதிக்கு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் நவம்பர் 6ம் தேதி, ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.