காஞ்சிபுரம் மாவட்டம்,  வாலாஜாபாத் அடுத்த அமைந்துள்ளது தேவரியம்பாக்கம் ஊராட்சி.  இங்கு ஏஎஸ்என் எனும் பெயரில் பாரத் கேஸ் ஏஜென்சி முகவராக சாந்தி அஜெய்குமார் செயல்பட்டு வருகிறார். இப்பகுதியில்  குடியிருப்புக்கு மத்தியில் கேஸ் குடோன் அமைத்து விநியோகத்தில் செயல்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென கேஸ் சிலிண்டர் பிடித்து 12 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




இந்நிலையில் அந்த வீட்டில் வசித்த விலங்குகளான நாய் மற்றும் இரண்டு பூனைகள் இத் தீ விபத்தில் சிக்கி உடல் முழுவதும் தீக்காயங்களால் நேற்று முதல் அவதிப்பட்டு வந்துள்ளது. இதனை யாரும் கவனிக்காத நிலையில் இன்று காலை முதல் பூனை குரல் வலியால் ஒலித்துக் கொண்டே இருந்தது. இது அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு பெரிதும் மன வருத்தத்தை அளித்த நிலையில் உடனடியாக தமிழக அரசின் 1962 கால்நடை அவசர ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் விலங்குகள் நிலை குறித்து ப்ளூ கிராஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 



 

கால்நடைத்துறை ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்த 40 நிமிடங்களில் காஞ்சிபுரத்திலிருந்து கால்நடை மருத்துவர் மற்றும் உதவியாளர் வந்து நாய் மற்றும் இரண்டு பூனைகளுக்கு சிகிச்சை அளித்து முதல் உதவி அளித்து ப்ளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைத்தனர். இதன்பின் அப்பகுதி மக்கள் சற்று மகிழ்ச்சி உற்றனர். மனிதனின் தீக்காயங்களுக்கு மட்டும் தானா உன் உரிமை அளிப்பீர்களா, எங்களைப் போன்ற விலங்குகளை கவனிக்க மாட்டீர்களா என கேட்பது போன்று அதனுடைய குரல் அமைந்திருந்தது.

 


சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை

 

பலத்த தீக்காயம் அடைந்த 12 நபர்கள் சிகிச்சை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்  சிகிச்சை அளித்து வந்த நிலையில், ஏழு நபர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  பூஜா ,அருண், சந்தியா, ஜீவானந்தம் குணால் ஆகிய ஐந்து பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐந்து பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.