உலக சுகாதார மையத்தின் தரவுகளின்படி உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 1.3 மில்லியன் பேர் சாலை விபத்தால் உயிரிழந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்தச் சாலை விபத்து காரணமாக 73 சதவிகிதத்திற்கு மேற்பட்ட 25 வயது மதிக்க தக்க இளைஞர்கள் அதிகம் உயிரிழிப்பதாக இத்தரவுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த சாலை விபத்து காரணமாக உலக நாடுகளின் பொருளாதார மொத்த உற்பத்தி வளர்ச்சி 3 சதவிகிதம் வரை குறைந்து வருகிறது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 


இந்தியாவை பொறுத்துவரை ஒரு நாளைக்கு சாலை விபத்தில் சுமார் 415 பேர் சராசரியாக இந்தியா முழுவதும் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக பல முக்கிய மாநிலங்களில் இருக்கும் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்து காரணமாக பலரும் உயிரிழந்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் வெளியான சாலை விபத்து தரவுகளின் படி தமிழ்நாட்டில் கடந்த 4ஆண்டுகளில் சாலை விபத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 சதவிகிதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. 


தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டு சாலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 17218ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு 7287ஆக குறைந்துள்ளது.


இப்படி நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சாலை விபத்து மரணங்கள் குறைய காரணம் என்ன?




தமிழ்நாட்டில் சாலை விபத்து மரணங்களை குறைக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை முன்னேடுத்தது. அதன்படி அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகளை கண்டறிந்து அங்கு இருந்த சாலை குறைபாடுகளை சரி செய்தது. அத்துடன் அந்தப் பகுதிகளில் விபத்து நடைபெற்றால் உடனடியாக ஆம்புலன்ஸ் வர வழிவகை செய்யப்பட்டது. இதன் காரணமாக சராசரியாக தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டால் 13 நிமிடங்களுக்குள் அங்கு ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்து விடுகிறது. இதனால் பலர் ஆபத்தான நிலையிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். 


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் சுமைகள் எவ்வளவு?


மேலும் தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பு தொடர்பாக அவ்வப்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை விதிமுறைகளை மீறி வாகன இயக்கிய 4.15 லட்சம் பேரின் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சாலை பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டத்தை அதிகாரிகளுடன் நடத்துவது வழக்கமாக வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் மூலம் சாலை பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு உடனடியாக சரி செய்யும் பணிகளில் அரசு ஈட்டுபட்டு வந்துள்ளது. 




அத்துடன் சென்னையிலுள்ள போக்குவரத்து டிஜிபி அலுவலகத்தில் 272 நெடுஞ்சாலையிலும் உள்ள ரோந்து வண்டிகள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆகவே காவல்துறையினரின் ரோந்து பணிகளும் தமிழ்நாட்டில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


2030ஆம் ஆண்டிற்குள் உலகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களை பாதியாக குறைக்க வேண்டும் என்று ஐநா பொதுசபை இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கு தமிழ்நாடு மாநிலத்தின் சாலை பாதுகாப்பு ஒரு முக்கிய முன் மாதிரியாக உள்ளது. தமிழ்நாட்டின் சாலை பாதுகாப்பு திட்டத்தை பிற மாநிலங்கள் மற்றும் நாடுகள் பின்பற்றினால் சாலை விபத்து மரணங்கள் குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. 


மேலும் படிக்க: ‛வேகம்... விவேகம்... கம்பீரம்... கர்ஜனை’ யார் இந்த சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.,?