புரட்சிகள் பல உண்டு. பால்வளத்தையும், நீலப் புரட்சி கடல்வளத்தையும், வெள்ளி புரட்சி என்பது முட்டை உற்பத்தியில் தன்னிறைவையும் உருவாக்கியது. அந்த வரிசையில் புதிதாக உதயமாகியிருக்கிறது, 'சிவப்பு புரட்சி'. 'ரெட் சில்லி ரெவல்யூஷன்" என்று கூறப்படும் இந்த புரட்சி மிழகத்தில் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயத்தின் மூலம் மிளகாய் காய்த்து, சிவந்து கொத்துக்கொத்தாய் தொங்குகிறது. இந்த புதிய புரட்சியை ஆச்சி நிறுவனம் கையிலெடுத்து தொடங்கியுள்ளது. இந்த சிவப்பு புரட்சியை 'ஆச்சி' உணவுக் குழுமத்தின் தலைவர் தொழில் மேதை ஏ.டி.பத்மசிங் ஐசக்கும், விவசாய வித்தகர் ‘நல்லக்கீரை’ ஜெகனும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.
இயற்கை விவசாய மிளகாயை 'ஆச்சி' மசாலா நிறுவனம் நல்ல விலைகொடுத்து விவசாயிகளிடம் இருந்து வாங்கி தங்களது தயாரிப்புகளுக்கு பயன்படுத்துகிறது. இந்த திட்டத்தால் மண்ணின் உயிர்த்தன்மை பாதுகாக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. மக்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகிறது. இயற்கை வேளாண் பொருட்களுக்கு வெளிநாட்டிலும் அதிக மவுசு உள்ளது. இந்தியாவின் பொருளாதாரமும் வலுப்படுகிறது. இயற்கை விவசாய மிளகாய் சாகுபடியால் நாட்டிற்கு இவ்வளவு அபரிமிதமான பலன்கள் கிடைப்பதால்தான் இதனை 'சிவப்பு புரட்சி' என்கிறார்கள்.
இது குறித்து தெரிவித்த ஏ.டி.பத்மசிங் ஐசக், "இருபது ஆண்டுகளுக்கு முன்னால் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கினேன். மக்களின் நம்பிக்கையை பெற்று, பத்து வருடங்களுக்கு முன்பே அதில் 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்தேன். பின்பு நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கும் 'உணவே மருந்து' என்ற கொள்கைத் திட்டத்தை செயல்படுத்தினோம். இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள சிறந்த விவசாயிகளை தேர்ந்தெடுத்து அவர்கள் விளைவித்த மிளகாய், தனியா, மஞ்சள் போன்ற விளைபொருட்களை தரம் பார்த்து வாங்கி மசாலா பொருட்களை தயாரித்து, மக்களுக்கு வழங்கி இந்த தொழிலில் தனித்துவம் பெற்றோம். 'சிவப்பு புரட்சியை அதற்கு செயல்வடிவம் கொடுத்து எங்களோடு இணைந்து செயல்படுகிறார், நல்லக் கீரை ஜெகன், திருவள்ளூர் மாவட்டம் மேலப்பேடு பகுதியை சேர்ந்த இவர் பி.காம். பட்டதாரி. தனித்துவமான பாடத்திட்டத்தை வடிவமைத்து, அதற்காக ஒரு கல்வி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்'' என்றார்.
மேலும் சிவப்பு புரட்சித் திட்டம் குறித்து பேசிய அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கருக்கு இலக்கு நிர்ணயித்து, வெற்றிகரமாக அதை செயல்படுத்தி வருகிறோம். பலமுறை அறுவடை நடந்துவிட்டது. ஆடிப்பட்டத்தில் மீண்டும் கோடிக்கணக்கான நாற்றுகள் நடுவதற்கு விவசாயிகள் தயாராக இருக்கிறார்கள். சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், நெல்லை போன்ற மாவட்டங்களிலும் ஏராளமான விவசாயிகள் இவ்வாண்டு இந்த திட்டத்தில் இணைந்து வேளாண் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் மிளகாய் மட்டுமின்றி இயற்கை வேளாண்மையில் மஞ்சள் சாகுபடி செய்யவும் திட்டமிட்டுள்ளோம். என்றார்.