மணலி மாத்தூர் மூன்றாவது மெயின் ரோட்டில் 79 வது தெரு இரண்டாவது குறுக்கு தெருவில் வசித்து  உடையார் (வயது 40).  இவரது மனைவி பெயர் செல்வி (வயது 32) இவர்களுக்கு சந்தியா (வயது 10) பிரியா லட்சுமி (வயது 8) என இரு மகள்கள் உள்ளனர். உடையார் zomato நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவருக்கு இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டதால் கீழ்பாக்கம் கே எம் சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


 அவரை கவனிக்க அவரது மனைவி செல்வி கே எம் சி மருத்துவமனையில் இருந்துள்ளார். உடையாரின் தாயார் சந்தான லட்சுமி குழந்தைகளை கவனிப்பதற்காக தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகில் ஆம்பூர் என்ற ஊரிலிருந்து வந்துள்ளார். நேற்று இரவு சந்தான லட்சுமி, சந்தியா, பிரியா லட்சுமி, பவித்ரா  நான்கு பேரும் ஒரே வீட்டில் இரவு தூங்கி உள்ளனர்.


செல்வியின் அண்ணன் பூதத்தான் எதிர் வீட்டில் குடியிருந்து வருகிறார் இவர்களது  மூத்த குழந்தை பவித்ரா (வயது 7) இந்த குழந்தையும் அந்த வீட்டில் இரவு தூங்கி உள்ளது. நள்ளிரவில் கொசு விரட்ட வைக்கப்பட்டிருந்த  எலக்ட்ரிக்கல் பொருள் உருகி கீழே விழுந்து  அட்டைப்பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு ஒரே புகை மண்டலம் ஏற்பட்டுள்ளது.


கதவை பூட்டிக் கொண்டு இருந்ததால் அனைவரும் தூக்கத்தில் இருந்ததால்  விஷ வாயு உருவாகி அவர்கள் தூக்கத்திலேயே உயிர் பிரிந்துள்ளது.  காலையில் வேலம்மாள் தனது குழந்தைகள் வரவில்லை என ஆறு முப்பது மணி அளவில்  கதவை தட்டி பார்த்தபோது எந்த பதிலும் இல்லை. இதனால் ஜன்னல் வழியே பார்த்த போது வீட்டில் ஒரே புகையாக இருந்ததும்   இதனால் அதிர்ச்சி அடைந்து கதறி அக்கம் பக்கத்தினரை அழைத்தனர். பலர் உதவியோடு கதவை உடைத்து வீட்டுக்குள்ளே சென்று பார்த்தபோது நாலு பேரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. நாலு பேர் உடலும் கருகிய நிலையில் கரும்புகையால் ஏற்பட்டு இறந்துள்ளனர். பலத்த தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை ஆனால் புகை மூட்டத்தால் மூச்சு திணறி உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.


இதுகுறித்து தகவல் அறிந்த மாதவரம் பால் பண்ணை போலீசார் விரைந்து வந்து நாலு பேர் உடலையும் கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூறுக்காக அனுப்பியுள்ளனர். மணலி உதவி ஆணையர் தக்ஷிணாமூர்த்தி ஆய்வாளர் வேலுமணி தலைமையில் போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.


 தூங்கும் போது கொசுவை விரட்ட எலக்ட்ரிக்கல் கொசு விரட்டி வைத்து இருக்கலாம் அதில் உள்ள திரவ எரிபொருள் தீர்ந்த பின்பு தொடர்ந்து மின்சார இணைப்பில் இருந்ததால் அது உருகி கீழே இருந்த அட்டைப்பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகையால் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.  இறந்து போன குழந்தைகள் மாத்தூரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.