இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றனது. மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்3 லட்சத்து 66 ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 4.01 லட்சம், நேற்று 4.03 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 3.66 லட்சமாக குறைந்துள்ளது. கொரோனாவுக்கான சிகிச்சையை பல்வேறு தரப்பினரும் எடுத்து வருகின்றனர். குறிப்பாக ரெம்டெசிவர் மருந்து கொரோனா காலத்தில் தவிர்க்க முடியாத மருந்தாக உள்ளது.
கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி, ரெம்டெசிவிர் மருந்தை அவசரக்காலப் பயன்பாடாக மிதமான கொரோனா நோய் அறிகுறி உள்ள நோயாளிகளிடம் (ஆக்சிஜன் செலுத்தப்படுபவர்கள்) பயன்படுத்தலாம். அதேசமயம் இந்த மருந்தை வேறு மருந்தோடு இணைத்துப் பயன்படுத்துவதால் தீங்கு ஏற்படாது என்ற சூழலில் பயன்படுத்தப்படலாம் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்துக்கு பல்வேறு இடங்களிலும் பற்றாக்குறை ஏற்பட்டது. பல இடங்களில் கள்ள சந்தையிலும் விற்பனை செய்யப்பட்டன.
இந்நிலையில் ரெம்டெசிவர் மருந்து கிடைக்கும் இடங்கள் என்ற அறிவிப்பு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.11 இடங்களில் எவ்வளவு கையிருப்பு உள்ளது என்ற விவரங்கள் அந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. இதனை பலரும் மக்கள் பயன்படலாம் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன. ஆனால் அந்த அறிவிப்பு மருத்துவமனைகளுக்கானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் ரெம்டெசிவர் மருந்தை பெறவே அந்த அறிவிப்பு எனவும் அது பொதுமக்களுக்கானது அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை நாளொன்றுக்கு 20 ஆயிரம் அளவிற்கு உயர்த்தித் தருமாறு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முதல்வர் முக ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.