தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. இருந்தும் தொற்று எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் முழு நேர ஊரடங்கு இன்று முதல் அமலானது. மே 10ம் தேதி அதிகாலை 4 மணி முதல் மே 24 ம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே அனைத்து போக்குவரத்திற்கு தடை. அத்தியாவசிய தேவைக்கு ஆவணத்துடன் பயணிக்கலாம், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்காது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் தங்களின் சொந்த வாகனங்களில் செல்கின்றனர்.

A two-week complete lockdown begins in Tamil Nadu today to control the spread of COVID-19

Visuals from Chennai pic.twitter.com/J3l8jgJMva
— ANI (@ANI) May 10, 2021

இந்நிலையில், சென்னையில் அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகளுக்காக 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் இன்று முதல் முக்கிய வழித்தடங்களில் 200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியாளர்களுக்காக இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் பயணம் செய்வோர் நோய் தடுப்பு விதிகளை பின்பற்றி முக கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.