அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு.
அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. கரூர் அருகே செட்டிபாளையம் தடுப்பணை வர்ண நிலையில் உள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக கடந்த 10 நாட்களாக அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அமராவதி அணைத்து தண்ணீர் வரத்து எதிர்பார்த்த அளவில் இல்லாததால் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது இதுநாள் கரூர் அருகே செட்டிபாளையம் தடுப்பணை வர்ண நிலையில் உள்ளது அமராவதி அணைக்கு காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து 64 கனியாக இருந்தது அணையிலிருந்து அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு 260 கனடியில் இருந்து 220 கனடியாக குறைக்கப்பட்டது புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 64.31 அடியாக இருந்தது.
மாயனூர் கதவணை.
கரூர் அருகே மாயனூர் கதவனுக்கு காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 988 கனஅடியாக தண்ணீர் வந்தது பாசனப்பகுதிக்காக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.
நங்கஞ்சி அணை நிலவரம்.
திண்டுக்கல் மாவட்டம் வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால் நன்காட்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை 39.37 அடி உயரம் கொண்ட நங்கஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது 28.65 அடியாக உள்ளது நங்கஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை.
கரூர் மாவட்டம் கா பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் மலைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி அனைத்து தண்ணீர் வரத்து இல்லை 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 11.57 அடியாக இருந்ததால் நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial.