Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி

Gas Cylinder Price: சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை, 31 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

Gas Cylinder Price: வியாபாரிகளை மகிழ்ச்சி அடைய செய்யும் விதமாக தொடர்ந்து நான்காவது மாதமாக, வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

வணிக சிலிண்டர் விலை குறைப்பு:

அதன்படி, சென்னையில் வணிக சிலிண்டருக்கான  விலை 31 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது கேஸ் சிலிண்டர் விலை 1809.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேநேரம், வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை, சென்னையில் 818.50 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4 மாதங்களாக குறையும் வணிக சிலிண்டர் விலை:

  • கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி வணிக சிலிண்டர் விலை ரூ.30.50 குறைக்கப்பட்டு, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.1,930.50 என நிர்ணயம் செய்யப்பட்டது
  • கடந்த மே மாதம் 1ம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைக்கப்பட்டு, ரூ.1,911.50 ஆக குறைக்கப்பட்டது.
  • கடந்த ஜுன் மாதம் 1ம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.72 குறைக்கப்பட்டு, ரூ.ரூ.1,840.50 நிர்ணயிக்கப்பட்டது

இந்நிலையில் தான் தொடர்ந்து நான்காவது மாதமாக ஜூலையிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் வணிக சிலிண்டரின் விலை ரூ.23.50 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.1,960 ஆக விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விலை நிர்ணயம்:

ஒவ்வொரு மாதமும் சந்தை விலை நிலவரங்களுக்கு ஏற்ப வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர் விலையானது மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் பிரதி மாதம் 1ம் தேதி வணிக மற்றும் வீட்டு பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையும் மாற்றி அமைக்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை தினசரி மாற்றியமைக்கப்படுகிறது. அந்தவகையில் சென்னையில் தொடர்ந்து 107-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்கப்படுகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola