ரெட் அலர்ட்:

கன்னியாகுமரி , நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில், அடுத்த 3 நாட்களுக்கு அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதால், வானைலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கூடுதலாக தேனி மாவட்டத்திற்கும் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை:

தென்மேற்கு பருவமழை தற்பொழுது அதி தீவிரமடைந்துள்ளதால் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுவ்தற்காக, சாலை மார்க்கமாக தேசிய பேரிடர் மீட்பு படை நான்கு குழுவினர் விரைந்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மேலாண்மை மையத்தில் இருந்து தமிழகத்தின் தென்மேற்கு பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இரண்டு குழுக்களும், நீலகிரி மாவட்டத்திற்கு இரண்டு குழுக்களும் விரைந்துள்ளனர். 

7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு:

இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஆகிய 7 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிக கன மழைக்கு வாய்ப்பு:

தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Also Read: Schools Holiday: கனமழை எச்சரிக்கை..! எங்கெங்கு ரெட் அலர்ட்? நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..

Also Read: India 75: நெருங்கும் சுதந்திர தினம்.. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருவதற்கான காரணம் என்ன? தெரிந்துகொள்வோம்..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண