வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் மழை கொட்டித்தீர்த்துள்ளது. இதனால், கோயம்பேடு, நுங்கம்பாக்கம், வில்லிவாக்கம், தி.நகர், கிண்டி, ஆலந்தூர், வளசரவாக்கம், கோடம்பாக்கம் என்று பல பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளது. இதனால், சென்னை முழுவதும் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல ஓடி வருகிறது. இதனால், சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக, வேளச்சேரி மற்றும் கொளத்தூர் மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.


சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சமூகவலைதளங்களில் சென்னைரெயின்ஸ் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. ட்விட்டர் தளத்தில் பலரும் இந்த மழையின் பாதிப்பை வைத்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.


சஞ்சிபி என்பவர் தனது டுவிட்டர் பதிவில், “ சென்னைவாசி நேயர்களே…! நீங்கள் போகக்கூடாத திசை…! கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு”இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.






அஸ்வின் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த மழையிலும் வேலைக்கு செல்லும் அவலத்தை நகைச்சுவையாக, “ மேனேஜர் : டேய் இன்னும் நீ போட் எடுத்துகிட்டு ஆபீஸ் வரலயா?” என்று கேட்பது போல கருணாசின் புகைப்படத்தை பதிவிட்டு டுவிட் செய்துள்ளார்.






செங்கல்பட்டு வெதர்மேன் என்பவர் இன்னும் வித்தியாசமான சிந்தனையில், நவம்பர் 10 – 14-ந் தேதி வரை புயல் தாக்கம் உள்ளதால் கேப்டன் கோலியும், கேப்டன் ரூட்டும் டாஸ் போடுவதை பதிவிட்டு, ரூட்தான் ஆந்திரா என்றும், விராட்கோலிதான் வட தமிழகம் என்றும் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு டாஸ் போடுவதற்கான நேரம்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.






பாலாஜி ராம் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், வெளியூர்வாசிகள் சென்னை வாசிகளுக்கு “ப்ரோ… கவனமா இருங்க என்று குறுஞ்செய்தி அனுப்புவதாக பதிவிட்டு, என்னடா ரொம்ப பயமூட்றீங்க…” என்று பதிவிட்டுள்ளார்.






பாலாஜி ராம் என்பவர், விவேக் தண்ணில கண்டம் காமெடியில் மழைநீருக்கு பயந்து அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, தமிழ்நாடு மக்களின் நிலை என்றும், குறிப்பாக சென்னை மக்கள் விடிய விடிய மழைக்கு பிந்தைய நிலை என்று பதிவிட்டுள்ளார்.






சுறா படத்தில் நடிகர் விஜய் தண்ணீருக்குள் இருந்து வெளியே வரும் காட்சியை பதிவிட்டு வேளச்சேரி மற்றும் கொளத்தூர் மக்கள் இன்று காலையில் என்று பதிவிட்டுள்ளார்.






இவ்வாறு அவர் சமூக வலைதளங்களில் வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னையின் நிலையை பலரும் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண