பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து நம் நாட்டின் விடுதலைக்காக தங்களது இன்னுயிர் நீத்த சுதந்திரப் போராட்ட வீரர்களையும் , தியாகிகளையும் நினைவுகூரும் வகையில் இன்று
  75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம் . இந்தியக் குடிமக்களாகிய நாம், நமது தேசப்பற்றை , வெவ்வேறு விதமாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் , இரண்டாம் உலக போர் காலம் தொட்டே  வேலூரில் ஒரு கிராமம் கடந்த 90  வருடத்திற்கும் மேலாக தங்களது கிராமத்தை ராணுவ பணிக்காக  தத்துக்கொடுத்துள்ளனர் .

 

கம்மவான்பேட்டை என்னும் இந்த கிராமத்தின் பெயரை, ராணுவப்பேட்டை என்று செல்லமாகப் பெயர் மாற்றிச் சென்றிருக்கிறார் அப்போதைய ஆளுநர் கே கே ஷா  . 

 



 

வேலூர் மாவட்ட தலைநகரிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கம்மவான்பேட்டை என்கிற ராணுவப்பேட்டை கிராமம் .இந்த கிராமத்தில் தற்சமயம் சுமார் 4500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . இதில் கிட்டதட்ட 4000 குடும்பத்தினர் தங்களை முழுமையாக ராணுவத்தில் ஈடுபடுத்திக் கொண்டவர்களே  . மீதம் இருக்கும் 500 குடும்பத்தினர் மட்டுமே விவசாயம் உள்ளிட்ட பிற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர் .

 

ஒவ்வொரு குடும்பத்திலும் , குறைந்தது பட்சம் 2 இல் இருந்து 5 ராணுவ வீரர்கள் வரை உள்ளனர் . ராணுவம் மட்டும் இல்லாமல் , கப்பல் மற்றும் விமானப்படையிலும் இந்த தேசபற்றுமிக்க கிராமத்தின் இளைஞர்கள் சேவை செய்து வருகின்றனர் .  இன்றைய தேதியில் கம்மவான்பேட்டை கிராமத்திலிருந்து சுமார் 3000 பேர் , ராணுவம் உட்பட முப்படையிலும் பணிபுரிந்து வருகின்றனர் .

 



 

 

மேலும் இந்த கிராமத்தில் , ராணுவ குடும்பத்தினற்குள்ளே தான்  பெண்  கொடுப்பது மற்றும்  எடுப்பது என்ற வாய்மொழி ஒப்பந்தம் போட்டுகொண்டு  கடந்த 4 தலைமுறைகளாக , ராணுவப்பணியில் இல்லாத குடும்பத்தில் சம்மதம் செய்வதில்லை என்ற கொள்கையை பின்பற்றிவருகின்றனர் . 

 

இது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் எல் ஏழுமலை வயது 37  என்பவர் ABP நாடு செய்தி குழுமத்திடம் பேசிய போது , ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுமார் 25 ,000 பேர்  தற்சமயம்  ராணுவத்தில் உள்ளனர் . இதில் 3000  பேர் கம்மாணவன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள்  .

 

மேலும் 1972 ஆம் ஆண்டு ஒரு அரசு விழாவிற்குப் பங்கேற்க வந்த  ,முன்னாள் தமிழக ஆளுநர் கே கே ஷா வருகை தந்தபொழுது , அவரை வரவேற்பதற்காக , எங்கள் கம்மவான்பேட்டை கிராமத்தைசேர்ந்த முன்னாள் இன்னல் ராணுவவீரர்களென 1000 திற்கும் மேற்பட்டவர்கள்  ராணுவ சீருடையில் , எங்கள் கிராமத்தில் வரவேற்பு கொடுத்தனர் , "இந்த சிறிய கிராமத்தில் இவ்வளவு ராணுவ வீரர்களா என்று ஆச்சர்யம் அடைந்த முன்னாள் ஆளுநர் ஷா , எங்கள் கம்மவான்பேட்டை கிராமத்தை , இனிமேல் செல்லமாக ராணுவப்பேட்டை என்றுதான் அழைக்கவேண்டும் என்று கூறிவிட்டு சென்றார் . அன்றிலிருந்து  , எங்களது ஊரைச் , சுற்றுவட்டார கிராமத்தில் இருப்பவர்கள்  ராணுவப்பேட்டை என்றே அழைக்கின்றனர் .

 



 

இந்த வீரமிக்க மண்ணில் அடுத்த தலைமுறையினர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில்  6 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை  ராணுவத்தில் சேர விருப்பம் உள்ளவர்களுக்கு , ஓட்டப்பந்தயம் , கயிறு ஏறுதல் , உயரம் தாண்டுதல் , நீளம் தாண்டுதல் உள்ளிட்ட அணைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றது . என்று பெருமிதத்தோடு  தெரிவித்தார் .

 

100 அடி கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி வீரவணக்கம் 

 

75 ஆவது சுதந்திர தினமான இன்று , சுதந்திரப் போராட்டம் , மற்றும் தேசத்தைக் காக்கும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த , சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் , ராணுவ வீரர்களைப் போற்றும் வகையில் , கம்மவான்பேட்டை கிராமத்தில் சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.