ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஐஏஎஸ் தமிழ் நாடு , மாநில திட்டக் குழுவின் உறுப்பினர் செயலாளராகப் பணி மாறுதல் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து மாநில திட்டக் குழுவின் உறுப்பினர் செயலாளராகப் பதவி வகித்து வந்த பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக , பொறுப்பேற்கவுள்ளார் .
வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக 3 ஆகப் பிரிக்கப்படும் என்று கடந்த 2019 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வேலூர் மாவட்டத்தை 3 ஆகப் பிரித்துத் திருப்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு திருப்பத்தூர் மாவட்டமும், ராணிப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு ராணிப்பேட்டை மாவட்டமும் புதிதாக உருவாக்கப்பட்டது .
புதிதாகப் பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தின் இரண்டாவது மாவட்ட ஆட்சியராகக் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பொறுப்பேற்றார் . ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிலவி வந்த தோல் தொழிற்சாலை தொழிலாளர்கள் பிரச்சினை , மணல் கடத்தல் , கொரோனா காலகட்டத்தில் ஆக்சிஜென் தடுப்பதுக்கு தீர்வு கண்டது மற்றும் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள் உள்ளிட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலவருடங்களாகத் தீர்வுகாணப்படாத பல முக்கிய பிரச்சனைகளை மிகவும் சாதுரியமாகக் கையாண்டு அதற்கான தீர்வுகளை எவ்வாறு காண்பது என்று அதிகாரிகளுக்குப் பல ஆலோசனைகளை வழங்கி அனைவராலும் பாராட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், தமிழ்நாட்டின் முக்கிய துறையான மாநில திட்டக் குழுவில் , உறுப்பினர் செயலாளராகப் பணி மாறுதல் கிடைக்கப்பெற்றதை அடுத்து அனைத்து துறை அதிகாரிகளும் கிளாட்ஸ்டன் புஷ்பராஜுக்கு ஐஏஎஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர் .
தமிழ்நாடு திட்டக்குழுவானது 1971, மே, 25ஆம் நாள் முன்னாள் முதல்வர் முதல்வர் கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்டது. மாநில திட்டக் குழு, முதல்வரின் தலைமையின்கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாகச் செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது. மாநில திட்டக் குழு துணைத் தலைவரின் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இத்திட்டைக்குழுவில் நிதித்துறை, திட்டக்குழு மற்றும் முன்னேற்றத் துறையில் முன்னாள் செயலர்களும் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், உறுப்பினர்களின் செயலாளர் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பணிகளை வழிநடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . மாவட்ட மக்களின் அன்பை பெற்றவர் என்கிற முறையில் மாவட்டத்திலிருந்து விடைபெறுகிறார்.