பெண் படுகொலை வழக்கு: இராமேஸ்வரம் முழுவதும் வெளிமாநில நபர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்

இதுபோன்று ஒவ்வொரு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள வெளி மாநில நபர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது

Continues below advertisement

இராமேஸ்வரம் அருகே மீனவப் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை செய்து காவல் துறையினர், ஒரிசாவைச் சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement

இந்நிலையில், இராமேஸ்வரம் நகராட்சி சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இராமேஸ்வரம் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் குடியிருக்கும் வெளிமாநில நபர்கள் மற்றும் வெளிமாநில் நபர்களை வைத்து வீடு கட்டும் உரிமையாளர்கள், இன்ஜினியர்கள், கட்டிட காண்டராக்டர்கள், மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள், விடுதி உரிமையார்கள், இறால் பண்னை உரிமையாளர்கள், பாணிபூரி மற்றும் குல்பிஐஸ் வைத்து தொழில் செய்து வருபவர்கள் உள்ளூர்வாசிகள் மூலமாக வேலை பார்க்கும் வெளி மாநில ஒவ்வொரு நபர்களின் கீழ்க்கண்ட ஆவணங்களை இராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் வரும் 15.06.2022 தேதிக்குள் உடனடியாக சமர்ப்பித்து பதிவு செய்யப்பட வேண்டும். தவனும்பட்சத்தில் நிறுவனத்தின்மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள்

1. பெயர்

2. வயது

3. புகைப்படம்

4. ஆதார் அட்டை

5. கைப்பேசி எண்

6. தற்போது வேலை செய்து வரும் நிறுவனத்தின் பெயர்

7. தற்போதைய முகவரி

8. நிறுவனத்தின் உரிமையாளர் பெயர்

9. நிறுவனத்தின் உரிமையாளரின் ஆதார் எண்

10. சைப்பேசி எண்

11. தற்போதைய இருப்பிட முகவரி

இதுபோன்று ஒவ்வொரு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள வெளி மாநில நபர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் எனவும், அப்போதுதான் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement