கரூர் மாவட்டத்தில்  மாலை ஒரு மணி நேரம் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ததால் மக்கள் சந்தோஷம் அடைந்து உள்ளனர். கடந்த ஒரு வாரமாக சுட்டெரிக்கும் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது.


இந்த வெயில் காரணமாக பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர் இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மாவட்டம் முழுதும் சிறிது நேரம் மட்டுமே லேசான அளவில் சாரல் மழை பெய்தது. இந்நிலையில்  இன்று மாலை  4.30 மணி அளவில் வானம் இருட்டிக் கொண்டு திடீரென இடி மின்னலுடன் ஒரு மணி நேரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.


 






கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு கருவி மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. மேலும் ராயனூர் பகுதிகளில் மின் கம்பம் சரிந்து விழும் நிலைக்கு சென்றதால் இந்த பகுதியில் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று சரிசெய்து உடனடியாக மின்சாரம் வழங்கும் பணியை மேற்கொண்டனர். மேலும், ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இதமான நிலை நிலவியதால் அனைத்து தரப்பினர்களும் சந்தோஷம் அடைந்தனர்.


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி கதவணை காவிரி நீர் வந்தடைந்தது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் 117 அடி தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக மே மாதம் 24 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார்.  அந்த தண்ணீரானது சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் வழியாக சென்று நேற்று நள்ளிரவில் கரூர் மாவட்டம், மாயனூர் கதவணையை வந்தடைந்தது.


 




இன்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 3454 கன அடி தண்ணீர் தற்போது காவிரி ஆற்றில் சென்று கொண்டுள்ளது. மாயனூர் வந்தடைந்த காவிரி நீரை உழவர் மன்ற அமைப்பாளர் சுப்புராமன் தலைமையிலான விவசாயிகள் பலரும் மலர் தூவி வரவேற்றனர். அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே 24 மதகுகள் வழியாக தண்ணீர் டெல்டா மாவட்டங்களுக்கு திறக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ததால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண