திருச்சியில் மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு:


திருச்சியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அரசு அதிகாரிகளிடம் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டம் எவ்வாறு செயல்படுகிறது, சொத்து வரி, பெயர் மாற்றம் பணிகள் , குப்பைகள் பணி, பொதுமக்களை எப்பொழுது பார்வையிடுகிறீர்கள் உள்ளிட்ட கேள்விகளை அதிகாரிகளிடம் கேட்டு திட்ட பணிகள் குறித்து தெரிந்து கொண்டார்.


மேட்டூர் அணை:


காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய பாசனத்திற்காக, கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மேட்டூர் அணையிலிருந்து நீரை  முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மற்றும்  மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.


டெல்டா மாவட்டங்களில் ஆய்வு:


தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொள்வதற்காக, 2 நாள் பயணமாக சென்னையிலிருந்து இன்று திருச்சி சென்றுள்ளார். அங்கு காவிரி நீர் வடிகால்களை ஆய்வு மேற்கொள்கிறார். அதனை தொடர்ந்து  நாகை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். நாளை மே 31ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூரில் வடிகால்களை ஆய்வு மேற்கொண்டு விட்டு சென்னை திரும்புகிறார்.


ஆய்வுகள் தொடரும்:


இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் நான் மேற்கொண்டு வரும் ஆய்வுகள் தொடரும் என  தெரிவித்துள்ளார். அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மன நிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது, அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவது தான் நல்லரசு என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண