பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பா.ம.க. ஒழுங்குக்கும். கட்டுப்பாட்டுக்கும் பெயர் பெற்ற இயக்கம். பா.ம.க.வின் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒரே குடும்பமாக பழகி வருபவர்கள் என்பதுதான் நாம் பெருமைப்படும் விஷயம். அண்மைக்காலமாக பா.ம.க. மற்றும் அதன் சார்பு இயக்கங்களில் பொறுப்பாளர்களை விமர்சித்து, சமூக ஊடகங்களில் பதிவிடும்போக்கு தலைதூக்கத் தொடங்கியுள்ளது. ஒழுங்குக்கும், கட்டுப்பாட்டுக்கும் எதிரான இப்போக்கை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.




பா.ம.க. மற்றும் அதன் சார்பு அமைப்புகளில் பொறுப்பாளர்களை விமர்சித்த, சமூக ஊடகங்களில் பதிவிடுவதை மன்னிக்க முடியாத குற்றமாக நான் கருதுகிறேன். எனவே, பா.ம.க. மற்றும் அதன் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த எவரும் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் பொறுப்பாளர்களை விமர்சித்து, சமூக ஊடகங்களில் பதிவிடும் போக்கை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.


பொறுப்பாளர்கள் மீது ஏதேனும் குறைகள் இருந்தால் அதை என்னிடம் தெரிவிக்கலாம். அதை விடுத்து, சமூக ஊடகங்களில் கட்சிப் பொறுப்பாளர்களுக்கு எதிராகப் பதிவிட்டால், அத்தகைய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுபவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும், கட்சியின் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவர் என்பதை கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க : மது கலாச்சாரத்தை ஒழிப்பதற்கான அரசியல் நம்மிடம் உள்ளதா?