சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மன்னன் மாமல்லன் பெயர் சூட்ட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


சென்னை பன்னாட்டு விமான நிலையம், இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் விமான நிலையங்களில் ஒன்றாகும். கடந்த 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வந்த போது சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த புதிய பன்னாட்டு முனையத்தை திறந்து வைத்தார். புதிதாக திறக்கப்பட்ட பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயர் வைக்கப்பட்டது. ஏற்கனவே உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மொத்தமாக விமான நிலையத்திற்கு பல்லவ மன்னன் மாமல்லன் பெயரை சூட்ட வேண்டும் என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.






அவர் அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை டேக் செய்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மன்னன் மாமல்லன் பெயர் சூட்ட வேண்டும்!! சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு முனையத்திற்கு அறிஞர் அண்ணா பெயரையும் தாங்கிய பெயர்ப்பலகைகள் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வைக்கப்பட்டிருக்கின்றன. விமான நிலையங்கள் ஆணையத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது! விமான நிலையங்களின் முனையங்களுக்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்கள் பத்தாண்டுகளுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் அப்பெயர்களை சூட்ட வேண்டும்; அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகளை மீண்டும் வைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பாமகவின் கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி! விமான நிலையங்களின் முனையங்களுக்கு பெயர் சூட்டப்பட்டிருப்பதைப் போல ஒட்டுமொத்த விமான நிலையத்திற்கு தமிழர்களின் வீரத்தை உலக நாடுகளுக்கு உணர்த்திய பல்லவ மாமன்னன் மாமல்லனின் பெயரைச் சூட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்காக தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்!” என குறிப்பிட்டுள்ளார்.  


Richest Chief Ministers : இத்தனை முதலமைச்சர்கள் கோடீஸ்வரர்களா? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எந்த இடம்?


மனித குலத்திற்கு அவமான சின்னம்...சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்..!


Margadarsi Chit Fund Scam: சிட் ஃபண்ட் பெயரில் வரலாறு காணாத மோசடி..மார்கதர்சி நிறுவனத்தை நெருக்கும் காவல்துறை