சூர்யா நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் ஜெய் பீம். பத்திரிகையாளர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் மணிகண்டன், லிஜோமோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் ராஜாக்கண்ணு என்பவரை காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் அடித்தே கொன்ற உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவானது.  இப்படம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமம் முதனை. அப்பகுதியைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு. 1993ஆம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் காவல்துறையினரால் லாக் அப்பில் அடித்து கொலை செய்யப்பட்டார். இருளர் இனத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணுவுக்கும் அந்த திருட்டு வழக்கில் தொடர்பு இல்லை என்பது பின்னர் தெரியவந்தது.


அதை தெரியவைத்து நீதி பெற்று தந்தவர், நீதியரசர் சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கே.சந்துரு, வழக்கறிஞராக பணியாற்றிய காலகட்டத்தில் அவர் இந்த வழக்கை எடுத்து நடத்தினார். இதனையடுத்து ராஜாக்கண்ணு கொலை வழக்கில் தொடர்புடைய காவல் துறையினர் உள்ளிட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. 




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கம்மாபுரம் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜா மோகன் மூலமாக வழக்கறிஞர் சந்துருவை ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அணுகவே வழக்கு உயர் நீதிமன்றத்தை அடைந்தது. ஆட்கொணர்வு மனுவாக தாக்கல் செய்யப்பட்டு பின்னர் அது கொலை வழக்காக மாறியது.


சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் நீண்டகாலம் விசாரிக்கப்பட்ட ஆட்கொணர்வு மனு ராஜாக்கண்ணு தொடர்பான மனுதான் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்நிலையில், ராஜாக்கண்ணு இறப்புக்கு நீதி கேட்டு அனைத்து கட்சிகளும் 1993ஆம் ஆண்டு நடத்திய கண்டன கூட்டத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், கம்மாபுரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதிமுதனை ராஜாக்கண்ணு அடித்து கொலையா? பிணம் எங்கே? போலீசார் மீது நடவடிக்கை கோரி அனைத்து கட்சி கண்டன பொதுக்கூட்டம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் அந்த போஸ்டரில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Watch Video: வெள்ளத்தில் போட்டோ ஷூட் நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலை!


Jai Bhim Movie: எழுந்து நின்று தலை வணங்குகிறேன்: ஜெய் பீமுக்கு மாதவன் பாராட்டு