சூர்யா நடித்து தயாரித்திருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தை த.செ. ஞானவேல் இயக்கியுள்ளார். மணிகண்டன்,ம் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியானது.


ராசாக்கண்ணு என்பவரை காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் கொலை செய்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது.




ஹிட் மட்டுமில்லாமல் பல விவாதங்களை இப்படம் உருவாக்கியிருக்கிறது.. படம்  பார்த்த பலர் படத்தின் பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை. அண்ணாத்த, எனிமி போன்ற தீபாவளிக்கு வெளியானாலும் ஜெய் பீம் படத்தை பற்றி இன்னமும் பலர் பேசிக்கொண்டும்,  படத்துக்கு பாராட்டும் தெரிவித்துவருகின்றனர்.


அந்தவகையில் நடிகர் மாதவன் ஜெய் பீம் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “சில படங்களே நம்மை சுற்றி நடப்பவை குறித்தும், மந்தமான நமது இருப்பு குறித்தும் நம் கோபத்தை தூண்டச் செய்யும். ‘ஜெய் பீம்’ படம் அப்படித்தான் எனக்குச் செய்தது. அற்புதமான, விறுவிறுப்பான, சிந்தையை தூண்டக்கூடிய இப்படம் தனது நோக்கத்தில் நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது.






 


சூர்யா ப்ரோ, உங்களுக்கு தலை வணங்குகிறேன். அற்புதமான நடிப்பு, மற்ற கதாபாத்திரங்களுக்கான காட்சிகளிலும், அவர்கள் பேசும்போதும், நீங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்றது மிகவும் பிடித்திருந்தது. ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போயுள்ளேன்.


 






ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க திரைப்படத்தை உருவாக்க ஒவ்வொரு துறைக்கும் மிக அற்புதமான முறையில் பொருத்தமான ஆட்களை தேர்வு செய்துள்ளீர்கள். நமக்கு ஒரு அற்புதமான நடிகர் கிடைத்துவிட்டார்.


 






அவரது கதைசொல்லல் முறையும், நுணுக்கங்களும் அபாரம். உங்களுக்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என்னுடைய பாராட்டுக்கள். உலகமே கொண்டாடும் வேளையில் எழுந்து நின்று தலைவணங்குகிறேன்” என பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண