கரூர் சிவா டெக்ஸ்டைல்ஸ்சில் மீண்டும் ரெய்டு.


 




 


 


தீபாவளி விற்பனை கணக்கை முறையாக காட்டாததாக கரூரில் ஜவுளி கடையில் வருமான வரித்துறையினர்  மூன்றாவது நாளாக சோதனை நடந்து வருகிறது. கரூர், ஜவகர் பஜார், குளித்தலை, பெரியாண்டவர் கோவில் ஆகிய இடங்களில் சிவா டெக்ஸ்டைல்ஸ் என்ற ஜவுளி நிறுவனம் பத்தாண்டுகளாக இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் கரூர் செங்குந்தபுரத்தை சேர்ந்த சரவணன் (50). தீபாவளி பண்டிகையின் போது நடைபெற்ற வியாபாரம் சம்பந்தமாக வரி ஏய்ப்பு நடைபெற்றதாக வருமானவரித் துறையினர்களுக்கு தகவல் வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் கோவை வருமான வரித்துறை ஆணையர் பாலாஜி தலைமையில் 15 க்கும் மேற்பட்ட குழுவினர், ஜவஹர் பஜாரில் உள்ள ஜவுளி நிறுவனத்திற்குள் அதிரடியாக உள்ளே சென்று சோதனை நடத்தினர்.


 




 


கரூர் சிவா டெக்ஸ்டைல்ஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில், மூன்றாவது நாளாக வருமானவரித்துறை சோதனை நடத்தினர். கரூர் மாநகரில் பிரபல ஜவுளிக்கடையான சிவா டெக்ஸ்டைல்ஸ் கடையில் நேற்று முன்தினம் காலை முதல் வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட தொடங்கினர். இந்த சோதனையானது கரூர் ஜவகர் பஜார் சிவா டெக்ஸ் ஜவுளி கடை, ஜவுளி வைக்கும் கிடங்கு, ஆண்டாள் கோவில் பகுதியில் உள்ள வீடு, குளித்தலையில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் ஜவுளிக்கடை மற்றும் வீடு என ஐந்து இடங்களில் தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நடைபெற்றது. மீண்டும் இன்றும் மூன்றாவது நாளாகவும் கரூர் சிவா டெக்ஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில், மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெறும் சோதனையால் இவர்கள் வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என தெரிய வருகிறது. வருமான வரிதுறை சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றபடலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது. கரூர் நகரில் அமைந்துள்ள கடை, குடோன், வீடு மற்றும் குளித்தலையில் அமைந்துள்ள ஜவுளி கடை என நான்கு இடங்களில் தொடர்ந்து மூன்றாவது நாளாக சோதனை நடைபெற்று வருவதாக கரூரில் மேலும், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.