புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலும் மதுக்கடைகள் மூடியிருப்பதால், மதுப்பிரியர்கள் மது குடிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய

   ஊரடங்கு அமலில் இருந்தது. தொற்று பாதிப்பு  குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அளித்திருக்கிறது . அதன்படி 44 நாட்களாக திறக்கப்படாத மதுபான கடைகள் திறக்கப்பட்டு காலை 9 மணி முதல் மாலை 5 மணி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மதுபான பார்கள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் புதுச்சேரி காவல்துறை ஆணையர் சுதாகர் தலைமையில்  மதுக்கடை உரிமையாளர்களுடன் மதுக்கடைகளை திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.




அதில், மதுபான கடைகளில் மக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். மது வாங்க வருவோர் மற்றும் மதுக்கடை ஊழியர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மது வாங்க வருபவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்வதுடன், அவர்களுக்கு கிருமி நாசினியும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன்படி, மதுபானக் கடைகள் உட்பட அனைத்து கடைகளும், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுபான பார்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை . சுற்றுலா பிரிவு மதுபான பார்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. 43 நாட்களுக்கு பிறகு நேற்று மதுபான கடை திறக்கப்பட்டதால், குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.




இதனால் மதுகடைகளில் விற்பனையும் அதிகமாக இருந்தது. வழக்கமாக ஒரு நாளில், புதுச்சேரி மாநிலம் முழுதும் ரூ. 3 முதல் 4 கோடி வரை மதுபானம் விற்பனையாகும். ஆனால், நேற்று ஒரே நாளில் ரூ. 7 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. 2ம் நாளான இன்றும் மதுபான கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் மதுபான கடைகளில் கூட்ட நெரிசலை தடுக்க வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே டோர் டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மட்டும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஆன்லைன் செயலி மூலமும், போன் மூலமும் வாடிக்கையாளர்களுக்கு மதுக்கடை உரிமையாளர்கள் டோர் டெலிவரி செய்வதற்கான பணிகளை துவங்கியுள்ளனர். கலால்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு மதுபானக் கடைகள் இந்த முறையை கடைப்பிடிக்கலாம் என்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மட்டும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.