புதுச்சேரியில் காவலர்களுக்கான உடல் தகுதித் தேர்வு 13ம் தேதி தொடக்கம்

கான்ஸ்டபிள் மற்றும் ஓட்டுனர் ஆகிய 2 பதவிக்கும் விண்ணப்பித்திருப்பவர்கள், இரண்டு தேர்வுகளிலும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.

Continues below advertisement

புதுச்சேரி: காவலர்களுக்கான உடல் தகுதித் தேர்வு 13ம் தேதி தொடங்குகிறது. புதுச்சேரியில் காவல்துறையில் நிலவும் பற்றாக்குறையை போக்க அனைத்து பணியிடங்களும் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 253 காவலர்கள் பணியிடத்திற்கு 14,173 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 14,045 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது, இதேபோல் 26 காவல் துறை ஓட்டுனர் பணியிடங்களுக்கு 881 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 4 விண்ணப்பம் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதி சீட்டை நாளை முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Continues below advertisement

காவலர்களுகான உடல் தகுதி தேர்வு வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது. நாள் ஒன்றுக்கு 500 பேர் அனுமதிக்கப்பட உள்ளனர். காலை 6 மணிக்கு தேர்வுகள் தொடங்கும். மொத்தம் 20 நாட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஓட்டுனர் தேர்வு 31ம் தேதி தொடங்க உள்ளது. கான்ஸ்டபிள் மற்றும் ஓட்டுனர் ஆகிய 2 பதவிக்கும் விண்ணப்பித்திருப்பவர்கள், இரண்டு தேர்வுகளிலும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் மைதானத்தினுள் வந்தவுடனேயே அவர்கள் கண்காணிப்பு கேமரா வளையத்திற்குள் கொண்டு வரப்படுவர் என புதுச்சேரி காவல் துறை ஐ.ஜி சந்திரன் பேட்டி.

 


என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

Continues below advertisement