Puducherry school leave ; 'டிட்வா' புயல் காரணமாக, நாளை 29.11.2025 புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை.

Continues below advertisement


புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 


'டிட்வா' புயல் காரணமாக, அதிகனமழை பெய்யக்கூடும் என்பதால் நாளை (29/11/25) சனிக்கிழமை புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.


கனமழை எச்சரிக்கை காரணமாக, தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை (நவ.29) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


டித்வா புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வரும் நாள்களில் கனமழை முதல் அதிகனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாகை, கடலூர், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தித்வா புயல் நிலவரம்:


வானிலை மையம் அறிக்கையின்படி, கடந்த 6 மணி நேரத்தில் கடலோர இலங்கை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் சூறாவளி புயல் திட்வா வடக்கு-வடமேற்கு நோக்கி 10 கிமீ வேகத்தில் நகர்ந்து இன்று, நவம்பர் 28, 2025 அன்று காலை 02.30 மணிக்கு அதே பகுதியில் மையம் கொண்டது. அட்சரேகை 8.1°N மற்றும் தீர்க்கரேகை 81.2°E, திருகோணமலைக்கு (இலங்கை) தெற்கே சுமார் 50 கிமீ, மட்டக்களப்பிற்கு (இலங்கை) வடமேற்கே 70 கிமீ, ஹம்பாந்தோட்டாவிற்கு (இலங்கை) வடக்கே 220 கிமீ, புதுச்சேரிக்கு (இந்தியா) தென்கிழக்கே 460 கிமீ மற்றும் சென்னைக்கு (இந்தியா) தென்கிழக்கே 560 கிமீ தொலைவில் உள்ளது. இது இலங்கை கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா வழியாக வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நவம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடையும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.


9 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை


தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 


நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். 


ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது


29-11-2025: வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


30-11-2025: வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


தமிழக கடலோரப்பகுதிகள்:


 28-11-2025 காலை முதல் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் 29-11-2025 காலை முதல் 30-11-2025 வரை மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 01-12-2025 முதல் காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.