தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II / IIA) முதன்மை தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

Continues below advertisement

செங்கல்பட்டில் இலவச பயிற்சி வகுப்புகள் - TNPSC FREE COACHING 

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு அரசு போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-II பதவிகளில் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-II உள்ளிட்ட 82 --- காலிப்பணியிடங்களுக்கும், தொகுதி-IIA பதவிகளில் முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட 1188 —காலிப்பணியிடங்கள் என மொத்தம் 1270 —காலிப்பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வானது 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது.

Continues below advertisement

கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் ?

இதனை தொடர்ந்து TNPSC Group II/IIA முதன்மை தேர்விற்கு தயாராகும் செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த போட்டி தேர்வாளர்கள் பயனடையும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் 01.12.2025 (திங்கட்கிழமை) அன்று துவங்கப்படவுள்ளது. மேலும் இப்பயிற்சி வகுப்பானது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறும். இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வாரந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் மற்றும் கையேடுகள் இலவசமாக வழங்கப்படும்.

தொலைபேசி எண்கள்

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டி தேர்வாளர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் மற்றும் TNPSC Group II/IIA Hall Ticket நகல்களுடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஒருங்கிணைந்த கட்டிடம், தரைத்தளம், டி-பிளாக், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 044-27426020 / 94990558951 மற்றும் 9486870577 / 9384499848 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.