புதுச்சேரியில் அரசு துறைகளில் பணி புரியும் பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளில்  2 மணி  நேரம் குறைக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. 


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசுத்துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் இரண்டு மணி நேரம் குறைக்கப்படும் என்று ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் முதல்வர் ரங்கசாமி கூட்டாக அறிவித்துள்ளனர். அதன்படி  காலை 9 மணிக்கு வேலை என்பதை 11 மணி என்று மாற்றப்பட்டுள்ளது.  விரைவில் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வெள்ளிக்கிழமைகளில் பெண்களுக்கு காலை வேலை பளு அதிகமாக இருப்பதால் பெண்களின் நலன் கருதி இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 


பிரான்சில் 5 மணி நேரம் வேலை குறைப்பு


உலக அளவில் பல நாடுகளும் தொழிலாளர்களின் நலனுக்காக பல அறிவிப்புகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் கூட பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் தங்களின் தொழிலாளர்களுக்கு வேலை நேர குறைப்பை அறிவித்தனர். அதன்படி ஸ்பெயின் நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் வேலை திட்டத்தின் தாக்கத்தை ஆய்வு செய்ய இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதனை தொடர்ந்து சில நாட்டில் வார வேலை நேரத்தை 45 மணி நேரத்தில் இருந்து 40 மணி நேரமாக குறைக்க இருப்பதாக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.


மேலும் சிலியில் உள்ள பல நிறுவனங்கள் இந்த மசோதாவை ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளது. இந்நிலையில் சிறிய நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர் ஜெநெட் ஜாரா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தொழிலாளர்களுக்கான உரிமைகளில் நாம் முன்னேற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

12 மணி நேரம் வேலை மசோதா


தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 12 மணிநேர வேலை சட்டமசோதா கொண்டு வரப்பட்டு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் 4 நாட்கள் 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் விடுப்பு வழங்க விரும்புவதாகவும், இது ஊழியர்கள் விருப்பத்தின்பேரில் மட்டுமே அமல்படுத்தப்படும், அதேநேரத்தில் வாரத்திற்கு 48 மணி நேரம் என்ற வேலை நேரத்தில் மாற்றம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. 


இதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து சட்ட மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர். மறுபுறம் தொழிற்சங்கள் சட்டமசோதாவை திரும்ப பெறாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தன. இது தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. 


மசோதா நிறுத்தி வைப்பு



இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் தொழிற்சங்க நிர்வாகிகள் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர சட்டமசோதாவை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  இந்தச் சூழலில் இரண்டு தினங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.