CM Stalin Delhi: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களுக்கு வழங்க வேண்டிய, நிலுவத்தொகையை வழங்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலின்:
பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக, தமிழ்நடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி சென்றடைந்தார். அவரை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் பலர் தலைநகரில் வரவேற்றனர். தொடர்ந்து, இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து, தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களுக்கான அமல்படுத்துவதற்கான, நிதியை ஒதுக்குமாறு வலியுறுத்த உள்ளார். மோன்றாவது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின், அவர ஸ்டாலின் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
முன்னதாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள், கனமழை கடுமையாக பாதிக்கப்பட்ட பின்னர் பேரிடர் நிவாரணம் வழங்க மத்திய அரசை வலியுறுத்துவதற்காக முதலமைச்சர் கடந்த டிசம்பரில் பிரதமரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
டெல்லியில் உள்ள பிரதமரது இல்லத்தில் காலை 10.45 மணியளவில், மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை சமர்பிக்க உள்ளார். அதில், sஅர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்காக வழங்க வேண்டிய சுமார் 500 கோடி ரூபாய் மற்றும் இரண்டம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றிற்கான நிதியை ஒதுக்குமாறு
முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மேற்கொள்ளும் தாக்குதல்களை தடுப்பது, அந்நாட்டு சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்தும் பிரதமர் உடன் ஆலோசிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகருக்கு தனது ஒரு நாள் பயணத்தின் போது, ஸ்டாலின் நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் கடந்த வாரம் காலமான மறைந்த சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் இல்லத்திற்குச் செல்வார் . அதோடு, கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்திப்பார் என கூறப்படுகிறது. அதனை முடித்துக் கொண்டு, இன்று மாலையே முதலமைச்சர் ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார்.