புதுச்சேரி முதலமைச்சரும் என்ஆர் காங்கிரஸ் நிறுவனத் தலைவருமான ரங்கசாமியின் பிறந்தநாளை புதுச்சேரியில் உள்ள அவரது ஆதரவாளர்களும் என்ஆர் காங்கிரஸ் கட்சியினரும் திருவிழாவாக கொண்டாடுவது வழக்கம்.  இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பேனர்களை வைத்து அசத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாள் விழா, அவரது தொண்டர்கள் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சர் ரங்கசாமிக்கு விதவிதமான உருவங்களில் விதவிதமான பேனர்களை வைத்து அசத்தி வருகின்றனர்.


முதலமைச்சர் ரங்கசாமி ஆதரவாளர்கள் பத்துதல படம் சிம்பு, ஜெயிலர் படம் ரஜினி கெட்டப்புகளில் முதலமைச்சர் ரங்கசாமியின் உருவத்தை பொருத்தி வைக்கப்பட்டுள்ள வாழ்த்து பேனர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வகையில், முதலமைச்சர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ரங்கசாமியின் ஆதரவாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் விதவிதமான பேனர்களை அதிகமாக வைத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


மேலும் ஒவ்வொரு பிரதான சாலைகளிலும் பெரிய அளவில் கட்டவுட் பேனர்கள் வைத்து அசத்தி வருவார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு ஒரு படி மேலாக சென்று நடுக்கடலில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் பேனர் வைத்துள்ளனர். முதலமைச்சர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்து ஆழ் கடல் நீச்சல் வீரர்கள் பேனரை பிடித்து முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ தற்போது புதுச்சேரியில் வைரல் ஆகி வருகிறது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.