பப்ஜி ஆன்லைன் விளையாட்டில் பெண்களை இழிவுப்படுத்தி பேசி அதனை யூட்யூபில் பதிவிட்டதாக மதன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில், பப்ஜி விளையாட்டில் மதனை பின் தொடரும் சிறுவர், சிறுமியர் உட்பட இளைஞர்களிடம் இயலாதவர்களுக்கு உதவி செய்வதாகக் கூறி பணம் மோசடி செய்தது தெரியவந்தது. அதனடிப்படையில், பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள வங்கி கணக்கில் இருந்த சுமார் 4 கோடி பணத்துடன், வங்கி கணக்கானது முடக்கப்பட்டது.

 


இந்த வழக்கில் தற்போது மதன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின் நிபந்தனைகளுடன் வெளியில் வந்த மதனின் மனைவி கிருத்திகா, தங்களிடம் உள்ளது ஆடி கார்தான் சொகுசு கார் இல்லை எனவும், தனது கணவர் 24 மணி நேரமும் உழைத்து சம்பாதித்த காசு எனவும் பேசியது சர்ச்சையானது. இந்த நிலையில் தற்பொழுது மதனின் மனைவி கிருத்திகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 

 


அபிராமபுரம் ஆக்ஸிஸ் வங்கி கிளையில் உள்ள தனது கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும், பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதால், வங்கி கணக்கி உள்ள சுமார் 3  கோடி பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தரப்பில் கூறும் போது, ஊரடங்கு காலத்தில் பலருக்கும் உதவி செய்வதாக  2848 நபர்களிடம் சுமார் 2.89 கோடி ரூபாய் பணத்தை பெற்று அந்த பணத்தை அபிராமபுரம் ஆக்ஸிஸ் வங்கி கிளையில் உள்ள கிருத்திகாவின் வங்கி கணக்கிற்கு மதன் பரிவர்த்தனை செய்திருப்பதாகவும், பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தவர்களிடம் வாக்குமூலம் பெற்று குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் , மோசடி பணத்தை பணம் கொடுத்து ஏமாந்தவர்களிடம்  திருப்பிக் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் எனவே இந்த பணத்தை திருப்பி கொடுக்கக் கூடாது இந்த பணம் மதனிடம் பணம் கொடுத்து ஏற்பந்தவர்களுக்கு தான் சென்று சேர வேண்டும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதை சற்று கவனிக்கவும் -*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*


 





 

யூ டியூப் வருவாய் மூலம் வெறும் 31 லட்சம் தான் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஆகியோர்க்கு கிடைத்த வருவாய் எனவும், மீதமுள்ள தொகை மோசடி பணம் என்பதால் அதனை திரும்ப பெற முடியாது என காவல் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பப்ஜி மதனின் மோசடி குறித்த ஆதாரங்களை வரும் 8-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.