பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

பொங்கல் பண்டிகை தமிழர்களின் மிக முக்கியமான அறுவடைத் திருவிழாவாகும். இது தை மாதத்தில் (ஜனவரி 14-17 வரை) நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகையாகும். இந்த பண்டிகையில் இயற்கையை வணங்கி, விவசாயிகளின் உழைப்பைப் போற்றி, புத்தரிசி அறுவடையைக் கொண்டாடும் திருநாளாகும். இந்த பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடிடும் வகையில் தமிழக அரசு சார்பாக ரேஷன் கடைகளில் பச்சரிசி, சக்கரை,கரும்பு, வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது.

Continues below advertisement

மேலும் பரிசு தொகையாக ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடையில் கூடுதலாக பொங்கல் பரிசு வழங்கப்படும் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில் புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பாக 750 ரூபாய் மதிப்பிலான 5 பொருட்களை கொண்ட தொகுப்பு வழங்கப்படும் என புதுவை அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் ஜனவரி 3ஆம் தேதி முதல் நியாயவிலைக்கடைகள் முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து அரசு ஊழியர்கள், கவுரவ ரேஷன் அட்டைதாரர்களை தவிர்த்து 3.5லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது.  4 கிலோ பச்சரிசி, 1 கிலோ நாட்டு சக்கரை, 1 கிலோ பாசி பருப்பு, நெய், சூரிய காந்தி எண்ணெய் உள்ளிட்ட 5 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.  

Continues below advertisement