மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின் கோட்டத்திற்கு உட்பட்ட மூன்று துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், நாளைய தினம் வியாழக்கிழமை, 11.12.2025 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை பல்வேறு இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சீர்காழி கோட்டம், இயக்குதலும் மற்றும் பராமரித்தலும் பிரிவின் செயற்பொறியாளர் (பொறுப்பு), மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Continues below advertisement

எதற்காக மின்தடை?

சீர்காழி கோட்டத்தில் இயங்கி வரும் வைத்தீஸ்வரன்கோவில் 110/33/11 கி.வோ. துணை மின் நிலையம், அரசூர் 33/11 கி.வோ. துணை மின் நிலையம், மற்றும் எடமணல் 33/11 கி.வோ. துணை மின் நிலையம் ஆகிய மூன்று துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதாக இந்த மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்கட்டமைப்பைப் பாதுகாக்கவும், சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்தவும் இந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் மிகவும் அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மின்தடை நேரம்

மின்தடை அமலில் இருக்கும் நாள் மற்றும் நேரம் பின்வருமாறு:

Continues below advertisement

* நாள்: 11.12.2025 (வியாழக்கிழமை)

*நேரம்: காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை

சுமார் எட்டு மணி நேரம் மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்ட பகுதிகள்

வைத்தீஸ்வரன்கோவில், அரசூர், மற்றும் எடமணல் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

1. வைத்தீஸ்வரன்கோவில் 110/33-11 கி.வோ. துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகள்

 * வைத்தீஸ்வரன்கோவில்

 * சீர்காழி முழுவதும்

 * புங்கனூர்

 * சட்டநாதபுரம்

 * மேலச்சாலை

 * கதிராமங்கலம்

 * ஆத்துக்குடி

 * திருப்புங்கூர்

 * தென்பாதி

 * பனமங்கலம்

 * கோவில்பத்து

 * கொள்ளிடம் முக்கூட்டு

 * விளந்திட சமுத்திரம்

 * புளிச்சகாடு

 * கற்பகம் நகர்

 * புதிய பேருந்து நிலையம்

 * பழைய பேருந்து நிலையம்

 * மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்

2.அரசூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகள்

 * புத்தூர்

 * எருக்கூர்

 * மாதிரிவேளுர்

 * வடரங்கம்

 * அகணி

 * குன்னம்

 * மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்

3.எடமணல் 33/11 கி.வோ. துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகள்

 * எடமணல்

 * திட்டை

 * செம்மங்குடி

 * திருமுல்லைவாசல் 

 மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்

பொதுமக்கள் தங்களின் அன்றாடப் பணிகளைத் திட்டமிட்டுக்கொள்ளும் வகையில் இந்தத் தகவல் முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.

நீடூர் துணை மின்நிலையம்

இதேபோன்று மயிலாடுதுறை மின்கோட்டத்திற்கு உட்பட்ட நீடூர் துணை மின்நிலையத்திலும் நாளை தினம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளையதினம் 11.12.2025 அன்று இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான

* நீடூர்

* மல்லியக்கொல்லை

* வில்லியநல்லூர்

* கொண்டால்

* பாலாக்குடி

*தாழஞ்சேரி

*கொற்கை

*அருண்மொழிதேவன்

*கங்கணம்புத்தூர்

*மேலாநல்லூர்

*நடராஜபுரம்

*கீழமருதாநல்லூர்

*மேலமருதாநல்லூர்

*பொன்மாசநல்லூர்

மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் மின் வினியோகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது என உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி தெரிவித்துள்ளார்.

கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது 

மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், அன்றையதினம் மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதல்களுக்கு உட்பட்டது என்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.