விளையாட்டை ஊக்கப்படுத்தும், மேம்படுத்தும் முதல்வர் ஸ்டாலின் போதி தர்மரின் மரபணவில் வந்தவர் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வப்பெருந்தகை சட்டப்பேரவையில் பாராட்டு தெரிவித்தார்.


சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் இன்று விளையாட்டு தொடர்பான பல அறிவிப்புகளை வெளியிட்டார். “அறிவு சக்தியை போன்று உடல் வலிமையையும் முக்கியம். அதில் விளையாட்டிற்கு முக்கியப்பங்கு இருக்கிறது. உடல்வலிமை, மனஉறுதி உள்ளிட்டவற்றை கொடுக்கும் விளையாட்டை வெற்றியையும், தோல்வியையும் சம்மாக பார்க்கும் மனநிலையை தருகிறது. சென்னைக்கு அருகே மிகப்பெரிய விளையாட்டு நகரம் (மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி) அமைய உள்ளது  சட்டப்பேரவையில் முதலமைச்சர் என அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் நான்கு மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும். சிலம்பம் விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில், சிலம்ப வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 விழுக்காடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை ஓப்பன் டென்னிஸ் தொடரையும், கடற்கரை கையூந்து பந்து போட்டிகளையும் நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார். 




விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் இந்த அறிவிப்புகளுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை, ''


கட்சியில் எப்படி எடுத்துக்காட்டாக இருக்கிறாரோ ஆட்சியில் எப்படி எடுத்துக்காட்டாக இருக்கிறாரோ உடல் வலிமையையிலும், உள்ளத்தின் வலிமையிலும் ஒரு எடுத்துக்காட்டாக தமிழக மக்களுக்கு காட்சியளித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர். ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உடல் மற்றும் உள்ளத்தின் வலிமை முக்கியம் என்று சொல்லுவார்கள்.   அறிவுத் திறனை அதிகரிக்கிறது எது அதிகரிக்கும் என்றால் உடல் வலிமையோடு உள்ளத்தின் வலிமை சேர்ந்தால்தான். அதன்படி, நான் மட்டும் இருந்தால் போதாது என்னுடைய தமிழகமே இருக்க வேண்டும் என்றும் ஒரு எடுத்துக்காட்டாக இந்த அறிவிப்பை அறிவித்திருக்கிறார்கள். 


ராகுல் காந்தி புத்தக வெளியிட்டு வந்தார் நாங்கள் காரில் வரும்போது முதல்வர் ஸ்டாலின் வயதை பற்றி பேசி வந்தார். நம்பவே முடியவில்லை என்று சொல்லி வந்தார்.  நான் சொன்னேன் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் சைக்கிள் ஓட்டுகிறார்கள் என்று. உடனே  விருப்பம் தெரிவித்த ராகுல்காந்தி, அடுத்த முறை வரும்போது அவருடன் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். 


நம் போதி தர்மர் அவர்கள் தான் இன்று உலகம் முழுவதும் விளையாட்டையும் தற்காப்பு கலையும் சொல்லிக்கொடுத்துள்ளார். ஒருவேளை போதிதர்மர் இல்லை என்றால் மேலை நாடுகளில் இந்த விளையாட்டும் தற்காப்பு கலைகளும் விரிவடைந்து இருக்காது.  தமிழனாக இருந்த போதிதர்மரின் விளையாட்டையும் அவருடைய தற்காப்பு கலைகலையும் மேலைநாடுகள் எடுத்துக்கொண்டது. ஆனால் நம்முடைய நாடு பின்தங்கிவிட்டது. போதிதர்மரின் மரபில் வந்தவர் தான் நமது முதலமைச்சர். விளையாட்டை மேம்படுத்திக் கொண்டு இருக்கிறார்.  ஒரு எடுத்துக்காட்டாக மாநிலம் எப்படி இருக்க வேண்டும் என்ற அக்கறையோடு செயல்படுகிறார்'' என்றார்.