குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மாரடைப்பால் காலமானார். இவரது இயற்பெயர் க. ராமச்சந்திரன், அவருக்கு வயது 55.  30 ஆண்டுகளுக்கு மேல் குமுதத்தில் பணியாற்றிய ப்ரியா கல்யாணராமன், ஆன்மிக சார்ந்த கட்டுரைகளை அதிகம் எழுதியவர். இவரது மரணத்திற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 


தமிழ்நாடு முதல்வர் தெரிவித்துள்ள இரங்கலில், ‘ மூத்த ஊடகவியளாலரும் குமுதம் வார இதழின் ஆசிரியருமான ப்ரியா கல்யாணசுந்தரம் என்கிற திரு. க ராமச்சந்திரன் அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்தார் எனும் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். முப்பதாண்டுகளாக குமுதம் இதழில் பணியாற்றி வந்த அவர், பல நூல்களை எழுதியிருப்பதுடன் பல எழுத்தாளர்களையும் ஊக்குவித்தவர் என்பதை ஊடக உலகினர் நன்கு அறிவர். குமுதம் இதழைக் காலத்திற்கேற்ப நவீனப்படுத்தி வந்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. திரு. ப்ரியா கல்யாணராமன் அவர்களின்  திடீர் மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத்துறையினருக்கும், நணொபர்களுக்கும் குமுதம் நிறுவன பணியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’. இவ்வாறு முதல்வர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.  






தனது இதழியல் வாழ்க்கையையினை தொடங்கிய காலம் தொட்டே, ஆன்மீகம் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடுவது, அதுகுறித்து கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் எழுதி ஆன்மிக கட்டுரைகளுக்கு என தனி கவனம் பெற்றார். இவர் ஆண்டவன் உங்கள் அருகில், தெற்கத்தி தெய்வங்கள், யாத்திரை போகலாம் வாங்க, கோவில் சொல்லும் கதைகள், குறை தீர்க்கும் கோவில்கள், மாண்புமிகு மகான்கள், ப்ளஸ் ஒன், இமயமலை தேசம், அன்னை மற்றும் சிறுகதைகள்  என மொத்தம் 22 புத்தகங்களை எழுதியுள்ளார்.  


இவரது திடீர் மரணம் குடும்பத்தினர், குமுதம் இதழின் குழுவினர், நண்பர்கள் மற்றும் அவரது வாசகர்கள் என அனைவரையும் ஆழ்ந்த வருத்தத்திலும் அதிச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண