கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அமைந்திருப்பது பட்டாம்பாக்கம். கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு செல்லும் பேருந்துகள் உள்பட வாகனங்கள் இந்த வழித்தடத்திலே செல்வது வழக்கம். இந்த வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் இயங்கி வருகிறது.


4 பேர் உயிரிழப்பு:


இந்த நிலையில், இன்றும் இந்த வழித்தடத்தில் வழக்கம்போல தனியார் பேருந்துகள் இயங்கிக்கொண்டு இருந்தது. அப்போது, கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்ற தனியார் பேருந்தும், பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் பட்டாம்பாக்கம் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.  


கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டனர். பேருந்தில் பயணித்த 4 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினரும், அந்த வழியே சென்ற சக வாகன ஓட்டிகளும் உடனடியாக காவல்துறைக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக மருத்துவ குழுவும், காவல்துறையினரும் சென்றனர்.


போலீசார் விசாரணை:


அவர்கள் இந்த கோர விபத்தில், பேருந்தின் உள்ளே சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேருந்தில் பயணித்த 72 பயணிகளும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த கோர விபத்து தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பேருந்துகள் அதிவேகமாக சென்றதே விபத்திற்கான காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரமும் வழங்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: TN Rain Alert: இது வெறும் ட்ரைலர்தான்... இனிமே தான் மழையோட ஆட்டம் ஆரம்பம்.. 13 மாவட்ட மக்களே.. தயாரா?


மேலும் படிக்க: TN Rains: 4 ஆயிரம் பணியாளர்கள்.. 24 மணி நேர கண்காணிப்பு.. எந்த மழையையும் எதிர்கொள்ள தயார் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.