பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த புதிய பன்னாட்டு முனையத்தை திறந்து வைக்கிறார். அந்த கட்டிடத்திற்கு அண்ணா பன்னாட்டு முனையம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 


பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் 7அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று மதியம் 2.45 மணிக்கு பிரதமர் மோடி  சென்னைக்கு வருகை தந்து பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார். முதலில் 3 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருக்கும் ஒருங்கிணைந்த புதிய பன்னாட்டு முனையத்தை திறந்து வைக்கிறார். இந்த புதிய பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பன்னாட்டு முனையும் என பெயர் பதிக்கப்பட்டுள்ளது.


விமான நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்தபின் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு மாலை 4 மணியிலிருந்து 4:20 மணிவரை, சென்னை கோவை இடையே அதிவிரைவு ரயில் ஆன வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதன் பின்பு மாலை 4:25 மணிக்கு சென்னை  சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காரில் புறப்பட்டு, மாலை 4:40 மணிக்கு, விவேகானந்தர் இல்லத்திற்கு செல்கிறார். அங்கு மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார். முதலில் இந்த நிகழ்ச்சி மைலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


அதனை தொடர்ந்து பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் கிரவுண்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார்.  பின்னர் இரவு 7:45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, இந்திய விமானப்படை தனி விமானத்தில் பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் மைசூர் புறப்பட்டு செல்கிறார். இரவு 8:40 மணிக்கு மைசூர் விமான நிலையம் சென்றடைகிறார்.


பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வரவேற்கும் விதமாக சாலை வழியெங்கும் பாஜக நிர்வாகிகள் பதாகைகள் வைத்துள்ளனர். சென்னை விமான நிலையம் பல்லாவரம் ஆகிய இரு பகுதியிலும் தற்போது ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இந்த பகுதி முழுவதும் காவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது, அது மட்டுமின்றி விமான நிலையத்திற்கு உள்ளே செல்லும் பயணிகள் அனைவரையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர். மேலும் சென்னையில் மட்டும் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பை மீறி யாரேனும் இடையே வர முயற்சி செய்தால் கைது செய்ய காவல் துறை தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Delta Coal Mine : டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து.. மத்திய அரசு அறிவிப்பு..


PM Modi Visit Chennai: பிரதமர் மோடி இன்று சென்னை வருகை.. 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு.. ஏற்பாடுகள் தீவிரம்..