விஜய் எப்படி செய்தாலும் உதவி செய்திருக்காரே! - பிரேமலதா சப்போர்ட்! 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து விஜய் உதவி செய்திருப்பதற்கு தேமுதிகவின் பிரேமலதா வரவேற்பு தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து விஜய் உதவி செய்திருப்பதற்கு தேமுதிகவின் பிரேமலதா வரவேற்பு தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “நாங்கள் அதிமுகவுடன் தான் கூட்டணியில் இருக்கிறோம். அதை நான் சொல்லிக்கொண்டே தான் இருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. வரும் உள்ளாட்சி தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடர்கிறது. எந்த குழப்பமும் வேண்டாம்” எனத் தெரிவித்தார். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து விஜய் உதவி செய்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “விஜய் எப்படி செய்தாலும் உதவி செய்திருக்காரே. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில் செய்கிறார்கள். அதை அப்படி பார்க்கணும். கடலூர், விழுப்புரம் கிருஷ்ணகிரியில் ஆய்வு செய்துவிட்டுதான் உங்களை சந்திக்கிறேன். மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். விஜய் மட்டுமல்ல. மற்ற கட்சிகளும் உதவி செய்ய வேண்டும். எல்லா சமூக ஆர்வலர்களும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். அந்த வகையில் தான் தமிழ்நாடு உள்ளது. பல லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். முதல்வர் களத்திற்கு வந்து இந்த பிரச்சினைகளை எல்லாம் தீர்க்க வேண்டும். சாத்தனூர் அணையை முன்னறிவிப்பில்லாமல் திறந்ததால் ஒட்டு மொத்த கடலூர் மாவட்டமே மூழ்கி உள்ளன. இது தான் இந்த ஆட்சியின் அவலம். 

சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்தபோது  என்ன நடந்ததோ அதேதான் இங்கு கடலூரில் நடந்துள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டும்வரை துரைமுருகன் என்ன பண்ணிக்கொண்டிருந்தார். திடீரென தூக்கத்தில் இருந்து முழித்தவர் போல அணையை திறந்து விட்டால் இப்படித்தான் ஆகும். இது தமிழக அரசின் முழு கவனக்குறைவு. இதனால்தான் அமைச்சர் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள். பேனரை கிழிக்கிறார்கள். போராட்டம் நடத்துகிறார்கள்” எனத் தெரிவித்தார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola