பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது. அறிவுரையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.