Pooja Holidays 2023: அடுத்த வாரம் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக 2 நாட்கள் சனி, ஞாயிறு என்பதால், வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்து இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தொடர் விடுமுறை:
வரும் 23ம் தேதி திங்கள் கிழமை அனைத்து தொழிலாளர்களும் பூஜிக்கும் ஆயுத பூஜையும், அடுத்த நாளான செவ்வாய் கிழமை விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு நாட்களும் அரசு விடுமுறை என்பதாலும், அதற்கு முந்தைய இரு நாட்கள் வார விடுமுறை என்பதாலும் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 4 நாட்கள் தொடர்ந்து தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் தங்கி வேலை பார்க்கும் பெரும்பலானோர் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள். அப்போது பயணிகள் கூட்டம் அலைமோதும் என்பதால், சிரமத்தை தவிர்க்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பேருந்துகள்:
வழக்கமாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகளுக்காக 2100 பேருந்து இயக்கப்படும். ஆயுதபூஜை ஒட்டி விடுமுறையை அக்டோபர் 20, 21 மற்றும் 22ம் தேதிகளில் கூடுதலாக 2,265 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், பெங்களூரு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
விடுமுறையை ஒட்டி சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் பயணிகள், www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை தடுக்க கோயம்பேடு, தாம்பரம், மெப்ஸ் மற்றும் பூந்தமல்லி பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து நான்கு நாள் விடுமுறையில் ஆயுதபூஜை வருவதால், சுற்றுலா தலங்களிலும், வழிபாட்டு தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்ப்பார்க்கப்படுகிறது. நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் சுற்றுலா தலங்கள் விடுமுறை கொண்டாட்டத்துக்கு தயாராக உள்ளன.
மேலும் படிக்க: Seeman on Leo: லியோவுக்கு கட்டுப்பாடுகள்; நிச்சயம் விஜய்க்கு கொடுமைதான் - சீமான் ஆதங்கம்