200-க்கும் மேற்பட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு
சுற்றிலும் விளைநிலங்கள் நடுவில் 20 ஆண்டுகளுக்கு கிரானைட் வெட்டி எடுக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கிரானைட் குவாரிகள் அமைக்க டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்டு வந்த பல்வேறு கிரானைட் குவாரிகளால் மேலூர்- கொட்டாம்பட்டி பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளானதோடு கிரானைட் முறைகேடுகள் காரணமாக 2013-ம் ஆண்டு முதல் கிரானைட் குவாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டது. மேலும் கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறுகின்றன. இந்தநிலையில் மேலூர் பகுதியில் உள்ள சேக்கிப்பட்டி, அய்யாபட்டி, திருச்சுனை ஆசிய 3 கிராமங்களில் 20 ஆண்டுகளுக்கு கிரானைட் வெட்டி எடுக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சிவகங்கையில் பழங்கால கழிவு நீர்க் குழாய் கண்டுபிடிப்பு - தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி
ஏற்கனவே இந்த பகுதி நிலத்தடி நீர்மட்டம் மிக பாதாளத்திற்கு சென்றுவிட்டது. விவசாயமும் பொய்த்துப் போய்விட்டது. இந்த சூழலில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள அய்யயாபட்டி மற்றும் சேக்கிப்பட்டி பகுதிகளில் கிரானைட் குவாரி நடத்த அரசு முயற்சிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . விவசாயிகளின் வாழ்வாதாரம் சுற்றுச்சூழலுக்கும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அமையப்போகும் இந்த கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். என அப்பகுதி விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்புகளை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனே திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்காக பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் என தெரிவித்தனர்.