Pongal Special Buses: தென்மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 


ஜன.12 முதல் சிறப்பு பேருந்துகள்:


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், "ஜனவரி 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.


பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சொந்து ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக ஜனவரி 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 17,581 சிறப்பு பேருந்கள் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 5 முன்பதிவு மையங்களும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும், கிளாம்பாக்கத்தில் 5 முன்பதிவு மையங்களும் செயல்படும்.


இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in மற்றும் tnstc official app ஆகிய இணையதளங்களில் வாயிலாக முன்பதிவு செய்யலாம். சிறப்பு பேருந்துகள் குறித்து அறியவும், புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். அதேபோல, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்" என்று தெரிவித்திருக்கிறார். 


எங்கிருந்து பேருந்துகள் இயங்கும்?


தொடர்ந்து பேசிய அவர், "பெங்களூரு செல்லும் SETC, ஈசிஆர் வழியாக மயிலாடுதுறை, கும்பகோணம், வேளாங்கண்ணி செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். NH-45 வழியாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.


இந்த  இரண்டு பேருந்து நிலையங்களை தவிர வேறு எங்கிருந்தும்  SETC பேருந்துகள் இயக்கப்படாது” என்றார்.  மேலும், ”செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம் செல்லுக்கூடிய பேருந்துகளும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கும்.  


திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், அரியலூர், திட்டக்குடி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ராமநாதபுரம், சேலம், கோவை பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் கோயப்பேட்டில் இருந்து புறப்படும். கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள் மீண்டும் பொங்கல் முடித்து சென்னைக்கு திரும்பும் போது கோயம்பேடு வராது.


கிளாம்பக்கத்திற்கு தான் வந்து சேரும். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் குறித்து பொதுமக்கள் பயப்பட வேண்டாம். தேவையான ஊழியர்களைக் கொண்டு போதுமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படும்" என்றார் அமைச்சர் சிவசங்கர். 




மேலும் படிக்க


திட்டமிட்டபடி ஸ்ட்ரைக்; போக்குவரத்து தொழிற்சங்கம் கறார்; நெருக்கடியில் தமிழ்நாடு அரசு


அதிகார துஷ்பிரயோகம் செய்த குஜராத் அரசு.. பில்கிஸ் பானு வழக்கில் நீதியை நிலைநாட்டியதா உச்சநீதிமன்றம்?