கரூர் மாவட்டத்தில் 3,31,158 தகுதி உள்ள அரிசி  குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் ரூ.1000 ரொக்க பணம் வழங்கப்பட்டு வருகிறது. 




 


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கு இணங்க பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் கரூர் மாவட்டத்தில் 3,31,158 தகுதி உள்ள அரிசி  குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் ரூ.1000 ரொக்க பணம் வழங்கப்பட்டு வருகிறது.


கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் ரூ.1000/- ரொக்கப்பணம் மற்றும் ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர்  வழங்கி தொடங்கி வைத்தார்கள். 
        




தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைகிணங்க மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்தறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கரூர் மாவட்ட மக்கள் அனைவரும் 2023 பொங்கல் பண்டிகையை சிறப்பாககொண்டாடும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் ரூ.1000/- ரொக்கப்பணம் மற்றும் ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை வழங்கப்பட்ட வருகிறது. கரூர் மாவட்டத்தில் தகுதியுள்ள 3,31,158 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 384 முழு நேர நியாயவிலைக் கடைகள் மற்றும் 219 பகுதி நேர நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் 03.01.2023 முதல் 08.01.2023 முடிய வழங்கப்பட்டுள்ளது. டோக்கன் வழங்கப்பட்டதன் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 09.01.2023 அன்று முதல் 13.01.2023 முடிய அனைத்து நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுகிறது.


தமிழக அரசு வழங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை பெற்றுக் கொண்ட காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த திருமதி காந்திமதி அவர்கள் தெரிவித்ததாவது: தலமைச்சர் ஐயா பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழகத்தில் உள்ள மக்களை எல்லாம் தன்வீட்டு மக்களை போல் எண்ணி அரிசி, கரும்பு, சர்க்கரை, அதோடு ரூ.1000 ரொக்கம் வழங்கியுள்ளார்கள். இதை வைத்து இந்த பொங்கலை நாங்கள் சிறப்பாக கொண்டாடுவோம் அதற்காக முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.




 


காந்திகிராமம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தெரிவித்ததாவது- முதலமைச்சர் ஐயா எங்கள் குடும்பத்திற்கு புதுசாக வேட்டி, சேலை, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, பணம் ரூ.1000 வழங்கி உள்ளார்கள். தமிழர் திருநாளை எப்போதும் நாங்கள் சிறப்பாக தான் கொண்டாடுவோம். இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக கொண்டாடுவதற்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு எனது குடும்பத்தின் சார்பாகவும் எங்களது கரூர் மாவட்டத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.